மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இருக்கும் இரண்டு இடங்களை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்களது ஆதரவாளர்களுக்காக பிரித்துக்கொண்டனர். அப்படி பிரித்துக்கொண்ட போதும் வேட்பாளர்களை அறிவிக்க இருதரப்பும் முடிவெடுக்க முடியாத சூழ்நிலையே நீடிக்கிறது. எடப்பாடி பழனிசாமி கோட்டாவில் உள்ள ஒரு சீட்டை எனக்கு தாருங்கள் என முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரை அணுகி கோரிக்கை வைத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் பத்து பேரின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டி வரும் என நினைப்பதாக அவரது ஆதரவு நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதனால், அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக தான் அறிவிக்கப்பட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். அதற்காகவே காய் நகர்த்தி வருகிறார். ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. முதலமைச்சராக பதவிவகித்தபோதே பெரும்பாலான நிர்வாகிகளை தனது ஆதரவாளர்களாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார். 


மேலும் படிக்க | அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு - பாதியில் வெளியேறிய வைத்தியலிங்கம்


அதனாலே முதல்வர் வேட்பாளர் விவகாரம், எதிர்கட்சித் தலைவர் விவகாரம் ஆகியவற்றில் அவரால் வெல்ல முடிந்தது. ஆனால் அவருக்கு ஆதரவளித்தவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு கோரிக்கையை எடுத்துவரும் போது என்ன முடிவெடுப்பது? என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். 2 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கு முன்னாள் அமைச்சர்களான ஜெயகுமார் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோரை வேட்பாளர்களாக அறிவிப்பது குறித்து நேற்று நடந்த கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னதாக பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் பதவியும் ஆண்களுக்கே கொடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 



தற்போதைய சூழ்நிலையில் ஜெயகுமார், சி.வி.சண்முகம் மற்றும் செம்மலை ஆகியோர் மட்டுமே இறுதி பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இரு வேட்பாளர்களில் ஒரு இடத்தை புதியவர்களுக்கு கொடுப்பதன் மூலம் எதிர்ப்பையும் சமாளித்து விட முடியும் என அதிமுக தலைமை நினைப்பதாக சில மூத்த நிர்வாகிகளே தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.


நேற்று நடந்த கூட்டத்தில் இறுதியாக தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கலாம் என முடிவு எடுக்கப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மண்டலத்தில் யாருக்கு வழங்கலாம் என்பதை ஓபிஸ், இபிஎஸ், வைத்தியலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் மீண்டும் பேசி முடிவு செய்வார்கள் என்று அதிமுக தரப்பில் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரிரு தினங்களில் வேட்பாளர்கள் அறிவிகப்பட்டுவிடுவார்கள் என்று அக்கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | அதிமுக கழக தேர்தல்: எடப்பாடி பழனிச்சாமி மீது ஒன்றிய செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு


இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது கூட்டப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு இரு முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் கூட்டவேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி. அந்த வகையில் மே 15ஆம் தேதியே பொதுக்குழு கூட்டத்தை நடத்தி விடலாம் என திட்டமிடப்பட்டது. பின்னர் ஜுன் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின் இதுகுறித்து அதிமுக தலைமை முடிவெடுக்க உள்ளது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR