அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு - பாதியில் வெளியேறிய வைத்தியலிங்கம்

சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் வைத்தியலிங்கம் வெளியேறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 6, 2022, 09:29 PM IST
  • அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை
  • உட்கட்சி தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
  • கோபமாக வெளியேறிய அதிமுக மூத்த தலைவர் வைத்தியலிங்கம்
அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு - பாதியில் வெளியேறிய வைத்தியலிங்கம் title=

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்  செங்கோட்டையன்,  எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், வைத்திய லிங்கம், தங்கமணி ஜெயக்குமார் , பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட்டில் இடம்பெறாத 12 முக்கிய அம்சங்கள்: பட்டியலிட்ட ஓபிஎஸ்

இதில், மக்களுக்கு பொருளாதார சுமையை அதிகரிக்கும், பெட்ரோல் டீசல் விலையேற்றம், சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவை குறித்து அதிமுக எடுக்க வேண்டிய நடவடிக்கை மற்றும் போராட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தற்போது நடைபெற்று வரும் மானிய கோரிக்கை மற்றும் விவாத நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் செயல்பாடு,  உட்கட்சி தேர்தல், உட்கட்சி விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வைத்தியலிங்கம் கூட்டம் முடியும் முன்பே கிளப்பிச் சென்றார். முன்னாள் சாபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அழைத்தபோதும் கோபத்துடன் தனது காரில் ஏறிச் சென்றுவிட்டார். அவர் எதற்காக கோபித்துக்கொண்டு சென்றார்? என்ற தகவல் வெளியாகவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த வைத்தியலிங்கம், சொந்த வேலை காரணமாக வெளியே சென்றதாக விளக்கம் அளித்தார். 

மேலும் படிக்க | அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்..? அறிக்கை வெளியிட்ட திமுக அரசு..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News