சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவு, தொற்றுநோயால் இறந்த COVID-19 முன்னணி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஆறுதல் தொகை குறித்து குழப்பத்தை உருவாக்கியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் உள்ள தொகை முதலில் அறிவிக்கப்பட்ட தொகையிலிருந்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளதே குழப்பத்திற்குக் காரணமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய அரசு உத்தரவின் படி, 28 அரசு ஊழியர்கள் மற்றும் Covid-19 பணியில் இருந்தபோது இறந்த முன்னணி வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட மாநில அரசு அனுமதித்துள்ளது. இருப்பினும், இந்த புதிய அரசாங்க உத்தரவு, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (K Palanisamy) முன்பு வெளியிட்ட அறிவிப்புக்கு முரணாக உள்ளது. ஏப்ரல் 22 ம் தேதி, கோவிட் -19 முன்னணி வீரர்களின் குடும்பங்களுக்கான ஆறுதல் தொகை 10 லட்ச ரூபாயிலிருந்து 50 லட்சமாக உயர்த்தப்படும் என்று அவர் கூறியிருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இறந்த ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களையும் அரசாங்கம் சேகரிக்கத் தொடங்கியது.


சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் இயக்குநர், ஜூலை 28 அன்று, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு முதல் பட்டியலைத் தயாரிக்குமாறு கடிதம் எழுதியிருந்தார், அதில் 33 பேர் இருந்தனர்.


ALSO READ: தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் நவம்பர் வரை இலவச அரிசி: முதல்வர்


இப்போது, ​​அரசாங்கம் ஆறுதல் தொகையை பாதியாகக் குறைத்துள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையும் 33 ல் இருந்து 28 ஆகக் குறைந்துள்ளது. குறைக்கப்பட்ட தொகை மற்றும் எண்ணிக்கை குறித்து முழுமையாக அறியாத அரசு ஊழியர்களிடையே இந்த அரசாங்க உத்தரவு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


செயலகம் வட்டாரங்கள் கூறுகையில், இந்தப் பட்டியல் இறுதிப் பட்டியலாக இருக்காது, மற்றொரு பட்டியலும் தயாரிக்கப்படலாம், மீதமுள்ள தொகை பின்னர் வழங்கப்படலாம் என்று தெரிவித்தன. அரசாங்க உத்தரவை வெளியிட்ட வருவாய் செயலர் அதுல்யா மிஸ்ரா, ஆறுதல் தொகை குறைக்கப்படுவது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.