பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸின் அமைதி ஆர்ப்பாட்டம்
31 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்தது என தமிழக மக்கள் பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புகளும் பதிவாகி வருகிறது.
சென்னை: 31 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்தது என தமிழக மக்கள் பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புகளும் பதிவாகி வருகிறது.
பேரறிவாளனை தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பொதுமக்கள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் பேரறிவாளனின் விடுதலையை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஆனால் காங்கிரஸ் சார்பில் பேரறிவாளன் விடுதலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தமிழர்கள் என்பதற்காக விடுதலை செய்யவேண்டும் என்றால் அது முறையாகாது என நேற்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்திருந்தார்.
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து இன்று (2022, மே 19) அறப்போராட்டம் நடத்தப் போவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் அறிவிப்பு செய்திருந்தனர்.
மேலும் படிக்க | பேரறிவாளன் விடுதலை - கருப்புத் துணியை கட்டி தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு காரணமான ஏழு பேருக்கும் தண்டனை கொடுத்த உச்சநீதிமன்றமே, சட்ட நுணுக்கங்களைக் காரணம் காட்டி பேரறிவாளனை விடுதலை செய்திருப்பது வருத்தம் அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று கோவை காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணி கட்டி சாலையில் அமர்ந்து காங்கிரஸார் அமைதிப் போராட்டம் நடத்தினர்.
அதேபோல, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவந்த பேரறிவாளன் விடுதலையை, காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாமன்ற உறுப்பினர்கள் சென்னை சத்திய மூர்த்தி பவனில் வாயில் வெள்ளை துணியை கட்டிக் கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களில், இதில் வன்முறையை எதிர்ப்போம் கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது என்ற தலைப்பில் பேனர்கள் வைத்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் வாயில் வெள்ளை துணி கட்டி அமைதிப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சேலம் மல்லூர் பகுதியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து நேற்று எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கருப்பு துணியால் கண்கள் மற்றும் வாயை கட்டிக்கொண்டு, காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | 'ஒரு பேட்டரி ஏற்படுத்திய பேரழிவு' - பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை!
தற்போது, மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒருபகுதியாக, திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டியவாறு அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் மணிக்கூண்டு அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநில காங்கிரஸின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் இந்தப் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வாயில் வெள்ளை துணியை கட்டிய காங்கிரஸ் கட்சியினர், தரையில் அமர்ந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | இனி உங்கள் கண்கள் உறங்கட்டும்; கால்கள் இளைப்பாறட்டும் - வாழ்த்துகள் அற்புதம்மாள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR