காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார்.
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (EVKS Elangovan) காலமானார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வயது 75 ஆகும். இவர். மக்களவை உறுப்பினராகவும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராகவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பொறுப்பு வகித்துள்ளார்.
கடந்த நவ. 13ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் சளி காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலால் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை இன்று மேலும் பின்னடைவை சந்தித்தது. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (டிச. 14) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது காங்கிரஸின் சென்னை சத்யமூர்த்தி பவனில் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. தொண்டர்களின் அஞ்சலிக்காக ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் சத்தியமூர்த்தி பவனில் நாளை (டிச. 15) வைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | இளங்கோவன் மரண செய்தியில் சர்ச்சை! இறப்பிற்கு முன்னரே வெளியான இரங்கல்..
மத்திய இணையமைச்சராக பதவி வகித்தவர்
5 முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டுள்ள இவர் ஒரே ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றார். 2004ஆம் ஆண்டு கோபிச்செட்டிப்பாளையம் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று, 2004-09 ஆண்டுகளில் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2000-2002 மற்றும் 2014-16 என இரண்டு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.
மகன் மறைவால் துவண்டுபோன ஈவிகேஎஸ் இளங்கோவன்
கடந்தாண்டு ஜனவரியில் ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக இருந்த இவரது மகன் திருமகன் ஈவெரா உயிரிழந்தார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் கடந்தாண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முன் 1984-89 காலகட்டத்தில் சத்தியமங்கலம் சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்துள்ளார். மகன் உயிரிழந்த பின்னர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மிகவும் துவண்டுபோனதாகவும் அவரது சுற்றத்தார் தெரிவிக்கின்றனர்.
தந்தை பெரியாரின் பேரன்
அரசியல் அனுபவம் வாய்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், திராவிட இயக்கத்தின் தொடக்கக் கால தலைவர்களில் முக்கியமானவரான ஈவிகே சம்பத்தின் மூத்த மகன் ஆவார். தந்தை பெரியாரின் உடன்பிறந்த அண்ணன் மகனே ஈவிகே சம்பத் ஆவார். அந்த வகையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெரியாரின் பேரன் ஆவார்.
மேலும் படிக்க | ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: தலைவர்கள் இரங்கல்... மருத்துவமனை செல்லும் ஸ்டாலின்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ