தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ( TN ELections 2021) கடந்த 6ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.  தேர்தலில் பதிவான வாக்குகள் மேம் மாதம் 2ம் தேதி எண்ணப்பட உள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவராவ் இன்று காலமானார். 


நுரையீரல் தொற்று காரணமாக 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் (Congress) கட்சியின் வேட்பாளர் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் காலமானார்.


தேர்தல் (ELections) பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவர் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மாதவராவ் வெற்றி பெற்றால்,  அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். அவர் தோற்றால் தேர்தல் ஏதும் நடத்தப்படாது. 


இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த தேர்தலில், மாதவராவ் வெற்றி பெற்று, இடைத்தேர்தல் நடந்தால் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மாதவராவ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக காங்கிரஸ்  தலைவர் கே எஸ் அழகிரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டால், மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டு, போட்டியிடுவார் என தெரிவித்தார்.


மாதவராவின் மறைவுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆகியோர்  இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.


ALSO READ | Covidக்கு பலியானார் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR