சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து சில நாட்களே ஆன நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவராவ் காலமானார்.
நுரையீரல் தொற்று காரணமாக 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார்.
Deeply pained to learn about the sad demise of @INCTamilNadu Leader & #Srivilliputhur Assembly #Congress candidate Shri #MadhavaRao, due to #Covid complications.
Our heartfelt condolences to his family. We stand with them in this hour of grief & pray may his soul rest in peace. pic.twitter.com/rKHlU9CIkN
— Sanjay Dutt (@SanjaySDutt) April 11, 2021
ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் இந்தத் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட அமைத்த காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட20 தொகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியும் ஒன்று. காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கிய மாதவராவ் எம்.பி.ஏ படித்தவர்.
Also Read | தமிழகத்தில் மீண்டும் லாக்டௌனா? மிரட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கையால் பீதி!!
காங்கிரஸில் விருதுநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாநில மாணவர் அணி துணைத் தலைவர், இளைஞர் அணி செயலாளர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்து கட்சியில் செல்வாக்காக இருந்தவர்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவர் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதவராவ் இறுதிக்கட்ட பிரசாரத்தில் நேரடியாக ஈடுபட முடியவில்லை.
Also Read | திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதில் எந்தவித மாற்றமும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மாதவராவ் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு ஏற்பட்டுவிட்டதாக கட்சி வட்டாரத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
Also Read | கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது தமிழக அரசு: எதற்கு அனுமதி உண்டு?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR