“சாதிக்க விரும்புகிறோம், எங்கள் சமூகத்தை வழிநடத்த வெற்றி பெறச் செய்யுங்கள்” என்கிறார் முனைவர் பட்டம் பெற்ற வேட்பாளர். இதில் என்ன ஆச்சரியம்! எல்லா வேட்பாளர்களும் இப்படித்தானே பரப்புரை செய்வார்கள் என்கிறீர்களா?
மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் 63 வயதான பாரதி கண்ணம்மா, மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர். அவர் தனது தேர்தல் பிரசாரத்தில், கடைக்காரர்கள், புர்கா உடையணிந்த பெண்கள், ஆட்டோ டிரைவர்கள்என பலருக்கும் விளம்பர துண்டுப்பிரசுரங்களை கொடுத்துச் செல்கிறார்.
பானை சின்னத்தில் போட்டியிடும் அவர், புதிய தலைமுறை மக்கள் கட்சியின் வேட்பாளராக களம் இறங்குகிறார். வாக்காளர்களின் மனதில் தன்னால் தாக்கத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறார் கண்ணம்மா.
LGBTQ சமூக உறுப்பினர்களை தங்கள் குழந்தைகள் என்கிறார் கண்ணம்மா. கண்ணம்மாவையும் சேர்த்து தமிழ்நாட்டில் இரண்டு மூன்றாம் பாலினத்தவர் மட்டுமே களத்தில் இருப்பது வருத்தமளிப்பதாக சொல்கிறார் கண்ணம்மா. தன்னம்பிக்கை தொனிக்கும் அவரது தேர்தல் வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?
அனைவருக்கும் கல்வி (அவர்கள் விரும்பும் அளவுக்கு), வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை (தகுதியின் அடிப்படையில்), ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மருத்துவ செலவுகள்.
இந்த வாக்குறுதிகள் அனைத்திற்கும் பணம் எங்கிருந்து வரும் என்ற கேள்விக்கும் கண்ணம்மாவிடம் பதில் இருக்கிறது. சமூக சேவை செய்யும் அவர் அதற்கான தீர்வையும் சொல்கிறார்.
மாதம் 50,000 க்கு மேல் சம்பாதிக்கும் எவரும் மீதமுள்ள பணத்திற்கு தனியாக வரியாக செலுத்த வேண்டும். "மக்களில் பெரும் பகுதியினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர், ஒரு சிலர் மட்டுமே வீடுகளையும் காரையும் வைத்துள்ளனர். அவர்கள் ஏழை மக்களுக்காக கொடுக்க வேண்டும். அது எல்லா வித்தியாசங்களையும் போக்கிவிடும்” என்று சொல்கிறார்.
Also Read | வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்
இந்த வாக்குறுதியை சமூகம் எவ்வாறு ஏற்றுக் கொள்ளும் என்ற கேள்விக்கும் அவருடைய பதில் இதுதான். மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே நாட்டை வளப்படுத்தும்....
பிரதான அரசியல்வாதிகளை கூட வெட்கப்பட வைக்கும் கல்வித் தகுதியை ஆயுதமாக கொண்டிருக்கிறார் கண்ணம்மா. அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் கண்ணம்மா, பொருளாதாரத்தில் இளங்கலை, சமூகவியலில் முதுகலை, கணினி பொறியியல் டிப்ளோமா மற்றும் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
“நான் ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் சவுராஷ்டிரா என ஆறு மொழிகளைப் பேசுவேன். எனது திறமைகளை வைத்து நான் நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்கிறார் கண்ணம்மா.
இந்தியா முழுவதும் இருக்கும் 5 லட்சத்திற்கு அதிகமான எல்ஜிபிடியூ சமூகத்திற்கு, அவர் ஒரு செய்தி வைத்திருக்கிறார்- “பாலியல் வேலைகளில் ஈடுபடுவதன் மூலமோ அல்லது பிச்சை எடுப்பதன் மூலமோ உங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் வாழ்க்கையை வாழ்வோம்” என்று அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் பாரதிகண்ணம்மா.
Also Read | மு.க. ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை: தேர்தல் நேரத்து திருவிளையாடலா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR