திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்புவிழாவில் 37,886 இளங்கலை, 5,268 முதுகலை 111 எம்.ஃபில் மாணவ, மாணவிகள் என மொத்தம் 43,735 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனர். இதில், 249 முனைவர் பட்டம், 42 இளங்கலை, 34 முதுகலை பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளுடன் பட்டங்களை தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி வழங்கினார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக இந்த பட்டமளிப்பு விழாவை தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, துணைவேந்தர் ஆறுமுகம், சிறப்பு விருந்தினர் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஜி.ராமதாஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.


சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ஜி.ஏ.ராமதாஸ்,சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், "புகழ்பெற்ற புலவர் திருவள்ளுவர் பெயரில் இயங்கி வருவது சிறப்புக்குரியது. மனித இனத்துக்கு தேவையான பல்வேறு கருத்துகளை திருவள்ளுவர் கூறியுள்ளார். அவர், கல்வியை பற்றி கூறும்போது, 'கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்றார். உங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. உங்கள் இதயம் முழுவதும் கனவுகளால் நிறைந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு 25 லட்சம் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இந்த எண்ணிக்கை சீனாவுடன் ஒப்பிடும்போது குறைவு. இந்திய மக்கள் தொகையில் 10% க்குகேக் அதிகமானவர்கள் தான் பட்டப்படிப்பு படிக்கின்றனர். 


மேலும் படிக்க | ஒடுக்கத்தூர் சேர்பாடி கிராமத்தில் திருவிழா.. ஓட ஓட அடித்து விரட்டிய போலீசார்


இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விகொள்கை பாடத்திட்டத்தில் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வாய்ப்புகளுடன் சர்வதேச வாய்ப்புகளுடன் இணைந்து செயல்படும் வகையில் உள்ளது. முன்பெல்லாம் வாய்ப்புகள் அதிகம் நிறைந்த நாடு என அமெரிக்காவை கூறுவார்கள். தறபோது அது இந்தியாவுக்கு மாறியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கவும் நிதியுதவி அளிப்பதும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம், புதிய கண்டுபிடிப்புகள், வியாபாரங்களின் மையமாக இந்தியா மாறியுள்ளது. மேலும், தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரமாக மாறியுள்ளது. 


நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படுகின்றன. ஐஐடிகள் பல வெளிநாடுகளில் தங்களது வளாகங்களை திறந்துவருகின்றன. உலகளவில் ஆராய்ச்சிகளின் மையமாக இந்தியா மாறி வருகிறது. பட்ஜெட்டில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிகப்படியான நிதியை வழங்கி வருகிறது. இதில், முன்னுரிமைகள் பல வழங்கப்பட வேண்டியுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுவதில, ஆராய்ச்சிக்கான நிதியுதவியை பெற்று வருகிறது. உங்களது வெற்றிக்குப் பின்னால் உங்களது பெற்றோர், ஆசிரியர்களின் தியாகங்கள் இருப்பதை மறந்துவிட வேண்டாம். இந்த நாடு உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது" என்றார். 


பட்டமளிப்பு விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்வேல் முருகன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்தனம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க | காதலியை பறித்த நண்பர்... கொலையில் முடிந்த கொடூரம் - அதிர்ச்சிப் பின்னணி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ