ஒடுக்கத்தூர் சேர்பாடி கிராமத்தில் திருவிழா.. ஓட ஓட அடித்து விரட்டிய போலீசார்

75 டெசிபலுக்கு மேல் அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர்களை வைத்து நடத்தியதால் செவிதிறன் பாதிக்கும் அபாயம்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 26, 2024, 03:15 PM IST
  • ஆடலும் பாடலும் நடன நிகழ்ச்சி.
  • ஸ்பீக்கர்களை வைத்து நடத்தியதால் செவிதிறன் பாதிக்கும் அபாயம்.
  • கோஷ்டி மோதல் ஓட ஓட அடித்து விரட்டிய போலீசார்.
ஒடுக்கத்தூர் சேர்பாடி கிராமத்தில் திருவிழா.. ஓட ஓட அடித்து விரட்டிய போலீசார் title=

தமிழகம் முழுவதும் திருவிழாக்களை முன்னிட்டு ஆடலும் பாடலும் எனும் நடன நிகழ்ச்சிகள் கிராம புறங்களில் மட்டுமல்லாமல் நகர பகுதிகளிலும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே அரங்கேறி வருகிறது. திருவிழாக்களில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் அதிக அளவில் சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்பீக்கர்கள் வைத்து பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. 

அவ்வாறாக ஸ்பீக்கர்கள் வைக்கப்படுவதால் அதிக சத்தத்தின் காரணமாக சத்ததின் அளவு 75 டெசிபலுக்கும் மேலாக கேட்பதால் மணி கணக்கில் நிகழ்ச்சியை பார்க்க வரும் பொதுமக்களின் செவித்திறன் பாதிக்கப்படும் அபாயங்களும் உள்ளது. மேலும் குழந்தைகள் உட்பட முதியவர்கள் வரை பார்க்கப்படுகிப்ன்றது. இதில் என்ன பாடல் என்று கேட்க முடியாத அளவிற்கு சத்தம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சாதிவாரி கணக்கெடுப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் - பாமக ஜிகே மணி இடையே காரசார விவாதம்..!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொடமாத்தம்மன் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவின் இறுதிநாளான இன்று ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்த கலை நிகழ்ச்சிக்காக 20க்கும் மேற்பட்ட அதிக சத்தம் எழுப்பும் கூடிய ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்பீக்கர்கள் மூலம் எழுப்பப்படும் சத்தமானது 75 டெசிபிலிக்கும் மேலாக ஒலி இருந்தது. தொடர்ந்து அதிக சத்தத்தை கேட்பதால் செவித்திறன் பாதிக்கப்படும் அளவிற்கு இருந்தது. ஒலி மாசினால் பொதுமக்களின் செவித்திறன் பாதிக்கப்படுவதுடன் உயர் ரத்த அழுத்தம் அதிகரித்து உயிரிழப்புக்களும் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது. 

இதற்கும் மேலாக இந்த நடன நிகழ்ச்சியின் போது ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே இருதரப்பினர் இடையே மோதல் வெடிக்கவே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர் இதனையடுத்து உடனடியாக மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் போலீசார் சமாதானம் பேசி பிரித்து அனுப்பினர் 

இருப்பினும் மீண்டும் மீண்டும் சண்டை அதிகரிக்கவே போலீசார் சண்டையில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கி துரத்தி அடித்தனர். இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் நடன நிகழ்ச்சியை நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கி மீண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதுபோன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் போது அதிக திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் அமைப்பதினால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பாடும். எனவே இனி வரும் காலங்களிலாவது இதற்கான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாகவே உள்ளது.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி சம்பவத்தை முதல்வர் திசை திருப்புகிறார்-கார்த்தியாயினி குற்றச்சாட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News