புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 29-வது பட்டமளிப்பு விழா பிப்ரவரி 28ம் தேதியன்று பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. மத்திய பல்கலைக்கழக 29-வது பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு... மாணவ மாணவிகளுக்கு ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பட்டங்களை வழங்க சட்டமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படி நடைபெறாததால் வாக்குவாதங்கள் வலுத்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைச்சர், எம், பி,. சட்டமன்ற உறுப்பினரை விட தகுதி குறைவானவரை அழைத்து பட்டங்களை வழங்குவதா? என துணைவேந்தர் குர்மீத் சிங்குடன் வாக்குவாதம் காரசாரமாக இருந்தது.


இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளதாக அழைப்பிதழில்  பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் விழாவில்  துணைநிலை ஆளுநர், முதல்வரும் விழாவில் பங்கேற்கவில்லை. இதனால்  சரமாரி கேள்விகளும் வாக்குவாதங்களும் எழுந்தன. 


மேலும் படிக்க: சவால்கள், சாதனைகள் என படிப்படியாக உயர்ந்தவர் முக ஸ்டாலின்: கமல்ஹாசன்


மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஆனால் விழாவில் திடீரென்று  ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். அப்போது எழுந்திருந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் ஜிப்மர் இயக்குனர் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்குடன் மேடையிலேயே கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



அமைச்சர், எம். பி, சட்டமன்ற உறுப்பினரை விட தகுதிகள் குறைவான ஒருவரை அழைத்து பட்டங்களை வழங்குவதா? என  பல்கலைக்கழக துணைவேந்தருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  பட்டமளிப்பு விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதனை அடுத்து விழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினரை சமாதானம் செய்தனர். ஆனால் அதையே மீறி அவர் துணைவேந்தருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.


ஆனால் இது எதையுமே கண்டுகொள்ளாத ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை தொடர்ந்து வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அறிவியல், பொறியியல், கணினி, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயின்ற 32,226 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களும் 126 பேருக்கு கோல்டு மெடல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | HBD CM MKS: திராவிட நாயகன் முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள்! வாழ்த்துகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ