தொந்தரவு செய்த போலீசார்.. கணவனால் கைவிடப்பட்ட பெண் தற்கொலைக்கு முயற்சி
Tamil Nadu Crime News: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! புகார் மனுவை விசாரிக்க போலீசார் லஞ்சம் கேட்டதால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம்.
Crime News in Tamil Nadu: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண் தன் மீதும் இரண்டு வயது பெண் குழந்தை மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரை சேர்ந்த லட்சுமி என்ற இளம் பெண்ணை கணவர் கைவிட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் சீர்வரிசையாக பெற்ற 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை திரும்பத் தராமல் தன்னை விட்டு விட்டு வேறு பெண்ணுடன் வாழ்வதாக பலமுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த அந்தப்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
பாதுகாப்பில் இருந்த தீயணைப்பு வீரர் உடனடியாக சென்று குழந்தையையும், பெண்ணையும் தண்ணீர் ஊற்றி காப்பாற்றி காவல் நிலையம் அழைத்து சென்ற காவல்துறையினர் விசாரனை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண் கூறுகையில், கடந்த 2018 தனக்கும் போஸ்வாவுக்கும் திருமணம் ஆன நிலையில், ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து எனது வீட்டில் வரதட்சணையாக எனக்கு போட்ட பத்து சவரன் நகையை விற்று செலவழித்து விட்டார். மேலும் வேறொரு பெண்ணை கள்ளத்தனமாக தொடர்பில் வைத்திருந்த அவர், தற்போது அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவோடு திருமணம் செய்து பகிரங்கமாக வாழ்ந்து வருகிறார்.
மேலும் படிக்க: மீண்டும் தனிமைப்படுத்துதல்... எச்சரிக்கையாக இருக்க அமைச்சர் அறிவுறுத்தல்!
இதுத்தொடர்பாக பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகார் மனுவை விசாரிப்பதற்கு பத்தாயிரம் என்னிடம் லஞ்சம் கேட்கின்றனர். எனக்கு யாரும் ஆதரவு இல்லை. இது தொடர்பாக காவல்துறை மற்றும் அரசு துறை அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தேன். அவரும் அடுத்த வாரம் வர சொன்னதால் மனவேதனையும் விரக்தியும் அடைந்த நான் எனது குழந்தை மீதும் என் மீதும் மண்ணெண்ண யை ஊற்றி இனிமேல் இந்த உலகத்தில் வாழ தகுதி இல்லை என்ற முடிவெடுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என சோகத்துடன் தெரிவித்தார். மேலும் தனக்கு நியாயம் கிடைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் படிக்க: 'கல்வி மூலம் விடுதலை' - விளிம்புநிலை மக்களுக்கான உதவித்திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ