மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 1,02,237 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதில், 1,594 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1489 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | கவலையை எழுப்பும் Omicron, கிடு கிடுவென பரவும் தொற்று


இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 51 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் அதிகபட்சமாக 776 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 146 பேருக்கும், கோவையில் 80 பேருக்கும், திருப்பூரில் 68 பேருக்கும், திருவள்ளூரில் 58 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 624 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 5 ஆயிரத்து 34 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஒமைக்ரான் வைரசால் இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 98 பேர் குணமடைந்துள்ளனர். 20 பேர் சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


ALSO READ | ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! ஆய்வில் தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR