சென்னை: இந்தியாவையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. இரண்டாவது அலையின் சீற்றம் மே மாதம் உச்சத்தில் இருந்தது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு,  ஊரடங்கு மற்றும் பல வித  தொற்று பரவல் நடவடிக்கைகள் காரணமாக மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 43 நாட்களுக்கும் மேலாக கொரோனா ஒரு நாள் தொற்றின் அளவு இறங்கு முகத்தில் உள்ளது.  கொரோனா ஊரடங்கில் கடுமையான நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டன. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், மக்களது நடமாட்டம் வெகுவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 


இந்த நிலையில், இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (J Radhakrishnan) செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் தொடர்ந்து தீவிரமாக பரிசோதனைகளும், கொரோனா நோயாளிகளை கண்டறியும் பணியும் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். 


இது குறித்து விரிவாக பேசிய ராதாகிருஷ்ணன், " ஊரடங்கில் இருந்து தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அனைவரும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனமின்றி இருக்கக்கூடாது. கொரோனா நோயாளிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா  உயிரிழப்புகளை தமிழக அரசு மறைக்கவில்லை. மறைப்பதற்கான அவசியமும் இல்லை. டெல்டா பிளஸ் (Delta Plus Variant) மட்டுமின்றி அனைத்து வகையான தொற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்கப்படும்” என்று கூறினார். 


ALSO READ: COVID-19 Update: தமிழகத்தில் 4,230 பேர் பாதிப்பு, 97 பேர் உயிர் இழப்பு 


தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், சிவகங்கை, தென்காசி, திருப்பத்தூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று தொற்று எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பைக் காண முடிந்தது.


வெள்ளியன்று தமிழ்நாட்டில் 4,230 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,88,407 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் நேற்று 238 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 97 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,818 ஆக அதிகரித்தது.


ALSO READ: Tamil Nadu: 15 மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு !! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR