சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்று தாண்டவம் ஆடி வருகிறது. அந்த வைரஸை கட்டுப்படுத்த முழு நாடும் ஊரடங்கு முடக்கம் [Lockdown] செய்யப்பட்டு உள்ளது. இதனால் தொழில்துறை முடங்கியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் வீட்டிலேயே அடைப்பட்டு உள்ளனர். அதேபோல வாகனங்கள், விமானம், ரயில் மற்றும் பேருந்து என அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர், குறிப்பாக ஏழை தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மிக அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்களுக்கு பல மாநிலங்களில் ரேஷன் கடைகள் மூலம் கொரோனா நிதி மற்றும் நிவாரணமாக பொருட்கள் வழங்க்கப்படுகிறது. அதேபோல தமிழகத்திலும் தமிழக அரசு சார்பாக  அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக ஏழை மக்களுக்கு வழங்கப்படுகிறது.


அதாவது தமிழ் நாடு முழுவதும் கொரோனா நிவாரணமாக மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் பணி இன்று தொடங்க உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.


கொரோனா வைரஸ் பரவி வருவதால், ஒரே சமயத்தில் அனைவருக்கும் அத்தியாவசியப் பொருட்களை சப்பளை செய்தால், கூட்டம் அதிகமாக கூடும், அதனால் வைரஸ் பரவக்கூடும் என்பதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளில் யாருக்கு எப்பொழுது விநியோகம் செய்யப்படும் என்ற விவரங்கள் ஒட்டப்பட்டது. மேலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நூறு பேருக்கு மட்டுமே இலவசமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.


மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் நாளை முதல் விநியோகம். இதற்காக கடந்த இரண்டு நாட்களாக டோக்கன்கள் வழங்கப்பட்டது. 


தமிழக முதல்வர் குடும்ப அட்டை கடைகளில், இதுவரை மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய், பருப்பு வகைகள் எல்லாம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.