தமிழகத்தில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்று நோய் என அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 82 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 2 பேர் இறந்துள்ளனர், 10 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக, நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.


இதன்னிடையே தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 16-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தத நிலையில் தற்போது இந்த விடுமுறை அறிவிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 


சுகாதாரத் துறையுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட வேண்டியிருப்பதால் விடுமுறை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இது தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.