புதுடெல்லி: கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது அனைவரின் கவலைகளையும் அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை இல்லாத அளவில் தேசிய அளவில் ஒரே நாளில் 2,00,000த்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,50,00,000க்கும் அதிகமாகிவிட்டது.


இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,73,123 ஆக அதிகரித்துவிட்டது. இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,29,564 ஆக உயர்ந்துள்ளது.



தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பூசி தமிழகத்திற்கு தட்டுப்பாடின்றி கிடைக்க உறுதி செய்யவேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


ALSO READ: Covidஐ அடியோடு விரட்ட 5 மருந்துகள் இன்னும் ஐந்து மாதத்தில்...


கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள போராடி வரும் மாநிலங்களின் ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். 


கொரோனா பரவலை தடுக்க தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும் என்று அந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் பிரதமர் உறுதியளித்துள்ளார்.


கொரோனாவுக்கு எதிரான போரில் ஆளுநர்கள் முக்கியத் தூண்களாக இருக்க வேண்டும் என்றும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் என்றும் பிரதமர மோதி தெரிவித்துள்ளார். ன பேசியுள்ளார். 


ALSO READ: சமூக இடைவெளி இல்லை, சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR