சென்னை: கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், போதுமான மருத்துவ வசதிகள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் நேற்று அதிகமானவர்களுக்கு கோவிட் -19 பரவிய நிலையில், இன்று மாநில சுகாதார செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஊடகங்களிடம் விளக்கம் அளித்தார்.
கோவிட் -19 மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்துகள் மாநிலத்தில் போதுமான அளவு இருப்பதாக அவர் மக்களுக்கு உறுதியளித்தார்.
Also Read | நிஜாமுதின் தப்லிகி மஜாத் மத கூட்டத்தை நினைவுபடுத்தும் ஹரித்வார் கும்பமேளா
புதன்கிழமையன்று (ஏப்ரல் 16, 2021) தமிழகத்தில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை 54,315 ஆக அதிகரித்தது.
துரிதகதியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம் என்று தெரிவித்த சுகாதார செயலாளர், மாநிலத்தில் 1.35% என்ற அளவில் தான் இறப்பு விகிதம் இருக்கிறது என்று தெரிவித்தார். இது ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த இறப்பு விகிதம் என்று குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் வலுவான சுகாதார அமைப்பு நிலைமையை திறம்பட சமாளிக்க உதவும் என்று தெரிவித்தார்.
அதோடு, தற்போதைய இக்கட்டான கொரோனா தொற்று சூழ்நிலையில் பொது சுகாதார மையங்கள், இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகள் என பல இடங்களிலும் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், எந்தவொரு நிலைமையும் சமாளிக்க அரசு தயார்நிலையில் இருப்பதாகவும் உறுதியளித்தார்.
Also Read | விதிகள் மாறாவிட்டால் 3 லட்சம் Remdesivir தடுப்பூசிகள் அழிக்கப்படும்
"சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் அதிகமான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்புகின்றனர். எனவே படுக்கைகளைப் பெறுவதில் சிரமம் உள்ளது. தேவைகளின் அடிப்படையில் படுக்கைகளை ஒதுக்கக்கூடிய நோயாளிகளை பரிசோதிப்பதற்கான ஒரு அமைப்பை இப்போது நாங்கள் உருவாக்கியுள்ளோம். இப்போது சுமார் 50,000 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 10 சதவிகித நோயாளிகள் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள் என்றால், இந்த அளவு சென்னை நகரத்தில் 20 சதவிகிதமாக உள்ளது" என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
45 வயதிற்குட்பட்ட விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கடைக்காரர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு கோரியுள்ளது என்றும் அவர் கூறினார்.
ALSO READ | கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும்
கோவிட் -19 மற்றும் பிற வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகள் இருக்கிறதா என்பது பற்றி குறிப்பாக பேசிய அவர், தமிழ்நாட்டில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் இருப்பதாகவும், இந்த அளவு மருந்துகள் 3 மாதங்கள் வரை தாக்குப்பிடிக்க உதவும் என்றும் தமிழக சுகாதாரச் செயலர் தெரிவித்தார்.
மேலும், மருத்துவமனைகளில் டீசல் ஜெனரேட்டர்களை வழங்குவது, மின்சாரம், ஆக்ஸிஜன் போன்ற வசதிகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷணன் தெரிவித்தார்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR