கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன்  2500 ரொக்க தொகையாக வழங்கியபோது ரூபாய் ஐந்தாயிரம் வழங்க கோரிய தற்போதைய முதல்வர் தற்போது வெறும் பொங்கல் தொகுப்பு வழங்கி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசாக இருப்பதாக  தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் பொங்கல் (Pongal 2022) தொகுப்புடன் வழங்கப்பட்ட மளிகை பொருட்கள் தரமற்றவையாக கலப்படமாக இருப்பதாகவும் கூறிய அவர் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1800 கோடி ரூபாயில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். குடியரசுதின விழாவில் தமிழக சிறப்பு ஊர்திகள் புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு தமிழக அரசு இதில்  நாடகம் ஆடுவதாகவும் கடந்த 2006 மத்தியில் தி.மு.க கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போதும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழக சிறப்பு ஊர்திகளுக்கு அனுமதி கிடைத்ததாகவும், மற்ற சில ஆண்டுகளில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். 


ALSO READ | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!


மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை என கூறிய அவர் கடந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் உத்திர பிரதேச அரசின் அலங்கார வாகன ஊர்திக்கு அனுமதி கிடைக்கவில்லை என தெரிவித்தார். வரும் உள்ளாட்சி தேர்தலில் பொங்கல் தொகுப்பில் மக்களை ஏமாற்றிய தமிழக அரசிற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.


ALSO READ | 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினருக்கு தர்ம அடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR