வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைப்பெற்று வருகிறது. கடந்த 5-ஆம் தேதி நடந்து முடிந்த வேலூர் மக்களவை தொகுதியில் 3,039 தபால் வாக்குகள் பதிவானதகா தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் நடைப்பெற்ற போது, பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு காரணாக வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் நாள் தேர்தல நடத்தப்பட்டது.


இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.


நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தமாக 72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த இரு  மக்களவை தேர்தல்களை விட இது 4% வாக்குப்பதிவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகிறது.


காலை 10 மணி முதல் 11 மணி வரை முன்னணி நிலவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 ஒப்புகைசீட்டு இயந்திரம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கடைசியில் எண்ணப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.