குற்றலா அருவிகளில் குளிக்க அனுமதி! சுற்றுலாப்பயணிகள் குஷி!
குற்றலாத்தில் நீர்வரத்து குறைந்ததையடுத்து குற்றலா அருவிகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குற்றலாத்தில் நீர்வரத்து குறைந்ததையடுத்து குற்றலா அருவிகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த தடை நீக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு குற்றலா அருவியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் பொழிந்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இதன் காரணமாக குற்றால அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்தது இதனால் குற்றால அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்ததையடுத்து குற்றலாம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.