தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில்  நகைகடன்  வழங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நெல்லையில் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தேர்தல் பணி தொடர்பாக நெல்லை வந்த அவர் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " முதல்வராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 4 மாத காலத்தில்  தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக  நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2.10 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரனா நிவாரண நீதி ₹4000 வழங்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் எந்த மாநிலத்திலும்  இல்லாத அளவுக்கு  பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என அறிவித்து முதல்வர் அதில்  வெற்றிகண்டுள்ளார். அனைத்து நியாயவிலை கடைகளிலும் தரமான அரிசி கடந்த 3 மாத காலமாக வழங்கப்பட்டு வருகிறது.   விவசாய பயிர்கடன் 2.93  கோடிக்கு மேலாக நிலத்தின் அளவிற்கு மேலாக கடந்த அரசு முறைகேடாக கடன் வழங்கியுள்ளது. போலியான பயிரை காட்டியதோடு  நிலத்தின் அளவையும் உயர்த்தி காட்டி கடனை வழங்கியுள்ளனர். அதிமுக அரசு விவசாய பயிர்கடனில் முறைகேடு செய்துள்ளது.



அதுபோன்று கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளே அடகுவைக்காமல் போலி நகைகள் மூலம் கடன் பெற்றுள்ளனர். போலியான ஆவணங்களை சமர்பித்து நகைகடன் பெற்றுள்ளனர். அந்நியோதி அன்னயோஜனா திட்டத்தின் அட்டையை வைத்தும் நகைகடனில் முறைகேடு நடந்துள்ளது தமிழக அளவில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆட்சியில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது . நகைகடன் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மிக விரைவில் கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 3999 பணியிடங்கள் வெளிப்படை தன்மையோடு நிரப்பபடும்.


இரண்டு  கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது தேர்தல் ஆணையம், இதனால் ஆளுங்கட்சி முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்கட்சிகள் கூறுகின்றனர்முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறும். கட்சி தொடண்டர் தவறு செய்தாலே கடுமையான நடவடிக்கை எடுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தேர்தலும் நேர்மையாக நடத்தப்படும்.  கூட்டுறவு சங்கங்களில் நடந்த தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தல் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் மிக விரைவில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும்.  கூட்டுறவு கடன் சங்கங்களை , மத்திய கூட்டுறவு வங்கிகளுடன்   இணைக்கும் பணி 4 மாதங்களுக்குள் முடிவடையும் என தெரிவித்தார்.     


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR