Ramadan 2024: ரமலான் நோன்பு இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ரமலானை முன்னிட்டு ஒரு மாதம் நோன்பைக் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், காலையிலும் இரவிலும் சுவையான உணவை உண்ண வேண்டும். ரமலானின் 12-14 மணிநேர நோன்பு இடைவிடாதது என்பது உங்களுக்குத் தெரியுமா? ரமலான் என்பது ஒரு மாதத்திற்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு இடையில் எதையும் சாப்பிடவோ அல்லது குடிப்பதையோ தவிர்க்கும் ஒரு காலமாகும். இஃப்தார் என கூறப்படும், மாலை உணவில் நோன்பு திறக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரமலான் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சுஹுர் எனப்படும் விடியலுக்கு முந்தைய உணவை சாப்பிட்ட பிறகு சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். பிறை கணக்குப்படி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும்.


அந்த வகையில் சவூதி அரேபியாவில் நேற்று முன்தினம் அதாவது மார்ச் 10 ஆம் தேதி ரமலான் பிறை தென்பட்டது. இதனால் நேற்று மார்ச் 11 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் நோன்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.


கோயமுத்தூர் அத்தார் ஜமாஅத் பள்ளிவாசல் சார்பாக ரமலான் பிறை பார்க்கும் கூட்டம் நடைபெற்றது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையானது ரமலான் பண்டிகை. ஆண்டுதோறும் பிறை பார்க்கப்பட்டு மாதம் முழுவதும் நோன்பிருந்து இறைவனை வழிபடுவார்கள்.அதேபோல இந்த ஆண்டு கோயமுத்தூர் அத்தார் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக பிறை பார்க்கும் நிகழ்வு தலைவர் ஆசிரியர் அமானுல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் செயலாளர் பீர் முகமது, முத்துவல்லி ஜாஃபர் அலி, செயற்குழு உறுப்பினர்கள் ஆசிக்அஹமது, முகமது ஷபிக், முகமது இப்ராஹிம், தலைமை இமாம் இப்ராகிம் பாகவி, மற்றும் மகாசபையாளர்கள் நூறு முகமது, சேட், அரசத், மோதினார்கள் உசேன், அசரப், ஜமாத்தார்கள் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டு பிறை பார்க்கும் நிகழ்வு கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க | 'ராமர் குறித்து தப்பா பேசுனாங்க' பெண் துறவி புகாரில் ட்விஸ்ட் - என்ன தெரியுமா?


தமிழகம் முழுவதும் பிறை தென்பட்ட காரணத்தினால் செவ்வாய் கிழமை முதல் ரமலான் நோன்பு ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து ரமலான் நோன் பையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற உள்ளதாக அத்தர் ஜமாஅத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கியமானது நோன்பு இருப்பது ஆகும் ஏழைகளின் பசியை அறிந்து தானம் செய்வதை உணர்த்தும் வகையிலான இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிப்பார்கள் இத்தகைய புனித மாதமான ரமலான் மாதம் இன்று முதல் துவங்கியுள்ளது. 


இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள பழமையான ஜாமியா பள்ளிவாசலில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் ரமலான் சிறப்பு தொழுகை தலைமை இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர் முன்னதாக அதிகாலை 4: 45 மணிக்கு நோன்பு இருப்பவர்களுக்கு சகர் உணவு வழங்கப்பட்டது.


மேலும் படிக்க | 'தேர்தல் நேரம்... CAA மூலம் கரையேற பார்க்கிறார் பிரதமர்' - ஸ்டாலின் கடும் சாடல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ