நோன்பு திறக்க... பாலும் பேரீச்சம் பழமும் ரொம்ப நல்லது - ஏன் தெரியுமா?

Ramalan Fasting: ரமலான் நோன்பு வரும் மார்ச் 12ஆம் தேதி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தொடங்க உள்ளது. நோன்பை முடிக்கும்போது பாலும் பேரீச்சம் பழமும் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.

  • Mar 11, 2024, 00:28 AM IST

 

 

 


 

 

1 /7

ரமலான் நோன்பு காலகட்டத்தில் உங்களின் உணவுப்பழக்கம் மாற்றமடையும் என்பதால் செரிமான அமைப்பிலும் மாற்றம் வரும். இதனால் மலச்சிக்கல் கூட ஏற்படலாம். எனவே, நார்ச்சத்து அதிகம் இருக்கும் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் செரிமானமும் சீராகும், மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது.   

2 /7

பாலில் உள்ள புரதமும், பேரீச்சம் பழத்தில் உள்ள இயற்கையான இனிப்பும இணைந்து நோன்புக்கு பின்னர் உங்களின் தசை மீட்சிக்கு உதவும்.  

3 /7

பேரீச்சம் பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைய உள்ளன. எனவே இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலு பெற செய்யும். 

4 /7

பேரீச்சம் பழத்தில் உள்ள இயற்கையான இனிப்புகள் உங்களுக்கு உடனடி ஆற்றலை வழங்கும்.   

5 /7

பேரீச்சம் பழத்தில் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான பொட்டாசியம், மேக்னீஸியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமிண் A மற்றும் K ஆகியவை உள்ளது.   

6 /7

பால் குடிப்பதன் மூலம் உங்களின் உடல் நீரேற்றமாக இருக்கும். பேரீச்சம் பழத்தையும் சேர்த்து உண்ணும்போது, உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டின் அளவு சமநிலை பெறும்.  

7 /7

நோன்பை முடித்து நீங்கள் பசியோடு சாப்பிடும்போது பேரீச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்தும், பாலில் உள்ள புரதமும், கொழுப்பும் உங்களுக்கு வயிறு நிரம்பிய திருப்தியை அளிக்கும்.