கொல்லங்கோடு : கன்னியாகுமரியில் நண்பர்களை நம்பி சுற்றுலா சென்ற கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் கொடூர பின்னணியை காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவி, தன்னுடன் வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களுடம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் சின்னதுறையை சேர்ந்த மாணவர், கடந்த ஜூலை மாதம் தனது தாயின் பிறந்தநாளை பொழியூர் கடற்கரையில் குடும்பத்துடன் கொண்டாட இருப்பதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறும் மாணவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


மாணவியும்  நண்பரின் தாய் பிறந்தநாள் விழா என்பதால் பெற்றோர் அனுமதி பெற்று சென்றுள்ளார். செல்லும் வழியில் தூத்தூரைச் சேர்ந்த மற்றொரு மாணவரும் அவர்களுடன் இணைந்துள்ளார். ஆனால் பொழியூர் கடற்கரைக்குச் சென்ற பின்னர், அங்கு மாணவரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை. அத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம் எனக்கூறியதும் பொய் என்பதை அறிந்த மாணவி, தன்னை வீட்டில் விட்டுவிடும்படி நண்பர்களுடன் கேட்டிருக்கிறார்.



ஆனால் மாணவர்கள் இருவரும் மது அருந்தத் தொடங்கியதுடன், மாணவியிடம் சில்மிஷம் செய்ய முயன்றுள்ளனர். இதனை கடற்கரையில் மது அருந்திக்கொண்டிருந்த வேறு இரண்டு நபர்கள் கவனித்துள்ளனர்.


மேலும் படிக்க | மழை பாதிப்பு: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


உடனே அருகில் வந்து மாணவர்களை கண்டித்ததுடன், அவர்களின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி கட்டிவைத்து தாக்கியுள்ளனர். அவர்கள் தனக்கு உதவ வந்தவர்கள் என மாணவி நினைத்துள்ளார். ஆனால் போதை தலைக்கேறியிருந்த அந்த இரு ஆசாமிகளும் மாணவியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.



அத்துடன் அதனை வீடியோவாக எடுத்து வைத்து, இதுகுறித்து வெளியே சொன்னால் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். மாணவியின் செல்போன் எண்ணையும் வாங்கி வைத்துக்கொண்ட அந்த ஆசாமிகள், அடிக்கடி அவரை தொடர்புகொண்டு தங்கள் ஆசைக்கு இணங்க வருமாறு மிரட்டியுள்ளனர்.



ஆனால் அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அவர்கள் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலானதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி, பொழியூர் காவல் நிலையத்திலும், குளச்சல் மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியதில், மாணவியை பலாத்காரம் செய்தது பொழியூரைச் சேர்ந்த 34 வயது நபரும், அவரது கூட்டாளியும் என்பது தெரியவந்தது. மாணவியை ஏமாற்றி கடற்கரைக்கு அழைத்துச் சென்ற மாணவர் மீதும், பலாத்காரம் செய்த இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மேலும் படிக்க | தாம்பரம் டூ ராஜபாளையம் - பிரபல ரவுடி சைலுவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை போலீசார்... யார் இவர்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ