700 ரூபாய்க்காக நடந்த கொடூர கொலை! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
சேலையூர் அருகே கிறிஸ்தவ பெண் போதகரை 700 ரூபாய் பணம், செல்போனுக்கும் கொலை செய்தவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சேலையூர் அருகே மதுரபாக்கம் வனப்பகுதியில் எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் போதகரை 700 ரூபாய் பணம், சாதா செல்போனுக்காக கொலை செய்தது போலீஸ்சாரின் பல்வேறு கட்ட விசாரனையில் தெரிய வந்து கொலையாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சேலையூர் அடுத்த அகரம் தென் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ பெண் போதகர் எஸ்தர்(51), ஜீன் மாதம் மதுரபாக்கம் வனப்பகுதியில் எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அவரில் செல்போன் காணமல் போன நிலையில் போலீசார் ஆதாய கொலையா என தேடிவந்த நிலையில் சில மாதங்கள் கழித்து அந்த செல்போனில் சிம் போட்டு பேசிய லோகநாதன்(20) எனும் இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் 700 ரூபாய் பணத்திற்கு கொலை நடந்துள்ளதாக தெரிய வந்தது.
இந்நிலையில் மர்ம மரணம் என பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளி லோகநாதனை கைது செய்து நிதிபதி முன்பாக ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சென்னையை அடுத்த சேலையூர் அருகே அகரம் தென் பகுதியை சேர்ந்த பெண்மணி எஸ்தர்(51), கிறிஸ்தவ போதகரக உள்ள இவர் கணவரை பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்த நிலையில் மகள் ஏஞ்ஜல் வீட்டில் தங்கியவாறு கிறிஸ்வர்களின் வீடுகளுக்கு சென்று ஜெபம் செய்வது வழக்கம், இந்த நிலையில் கடந்த மே மாதம் 26ம் தேதி அதிகாலை வீட்டில் இருந்து கைபையுடன் சென்றவர் விடு திரும்பவில்லை என ஜீன் மாதம் 6 ம் தேதி அவரின் மகள் ஏஞ்ஜல் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனயடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் சேலையூர் அடுத்த மதுரப்பாக்கம் வனப்பகுதியில் எலும்பு கூடு ஒன்று இருப்பதாக சேலையூர் போலீசாருக்கு தகவல் வந்தது. பின்பு நேரில் சென்று எலும்புகூட்டையும் ஒரு கை பை ஒன்றும் கைப்பற்றிய போலீசார் ஏஞ்சலை நேரில் அழைத்து எலும்புகூட காட்டி விசாரித்த போது அடையாளம் தெரிய வில்லை.
ஆனால் கை பை தன் அம்மாவுடையது என கூறியதால் காணமல் போன அம்மா இறந்து எலும்புகூடானது தெரிந்து கதறி அழுதுள்ளார். இதனால் எஸ்தரின் எலும்பை தடய அறிவியல் கூடத்திற்கு அனுப்பி வைத்த நிலையில் ஏஞ்ஜலிடம் மேலும் விசாரித்தபோது அம்மாவின் செல்போன் எங்கே என கேட்டுள்ளார். இதனால் உஷாரான போலீசார் சைபர் கிரைம் போலீசுக்கும் தகவல் அளித்து விசாரனை தொடர்ந்தனர். இதனிடையே தடய அறிவியல் பரிசோதனையில் எலும்புகூடு கழுத்து பகுதியில் முறிவு இருந்ததால் கொலையா? அல்லது இறந்த பின்னர் சேதமானதா என புலன் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காணமால் போன பட்டன் செல்போனில் வேறு ஒரு சிம்கார்டு வேலை செய்ததையும் அதன் பட்டியலையும் அளித்தனர். அதன் அடிப்படையில் சுரேஷ் என்பவரை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தபோது தனது நண்பன் மதுரபாக்கதை சேர்ந்த லோகநாதன்(20) என்பவன் அளித்ததாக கூறியதை அடுத்து மதுரபாக்கத்தில் சுற்றி திரிந்த லோகநாதனை பிடித்து காவல் நிலையத்தில் விசாரித்தனர்.
தனக்கு குடிப்பழக்கம் உள்ள நிலையில் ஜீன் மாதம் 25ம் தேதி மது போதையில் மதுரப்பாகம் வனப்பகுதி அருகே படுத்து இருந்த போது எஸ்தர் ஆவரம்பூ பறித்து கொண்டு இருந்தபோது கைபை பறித்ததாகவும் அப்போது பையை விடாமல் கெட்டியக பிடித்ததால் கீழே தள்ளி கழுத்தில் எட்டி உதைத்துவிட்டு கை பையில் 700 ரூபாய் பணம், ஒரு சாதாரண போன் பறித்து கொண்டு சென்றதாகவும், அந்த செல்போனை நண்பன் சுரேசிடம் கொடுத்துவிட்டு அந்த 700 ரூபாய் பணத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று திரும்பி சாதாரணமாக மதுரபாக்கத்தில் சுற்றிவந்தபோது போலீசிடம் சிக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தனக்கு சர்க்கரை நோய் இருப்பதல் கண்ணீல் படும் ஆவாரம்பூ பறித்து நாட்டு மருதாக பயன்படுத்தியுள்ளார், அதற்காக மதுரபாக்கம் வனப்பகுதியில் தனியாக ஆவாரம்பூ பறிக்கும்போது சிறுவதில் குடிபோதைக்கு ஆளான நபரால் 700 ரூபாயும், சாதா செல்போன் உள்ள கை பையை பறிக்க முற்பட்டு கொலையில் முடிந்துள்ளதும், அதன் பின்னர் நல்லவன் போல் 6 மாதமாக ஊரில் வலம் வந்த கொலையாளியை புலன் விசாரனை, தடயவியல் பரிசோதனை, சைபர் கிரைம் கண்காணிப்பு என படிப்படியாக தொடர் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்த சேலையூர் போலீசாரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
மேலும் படிக்க | சொத்து விவரங்களை வெளியிட திமுக தலைவர்கள் தயாரா?... அண்ணாமலை கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ