Customs: சுமார் ₹23 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்
துபாயில் இருந்து வந்தவர்களிடம் இருந்த கடத்தல் பொருட்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கக் கடத்தல் தொடர்பாக துப்பு கிடைத்ததை அடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.
துபாயில் இருந்து வந்தவர்களிடம் இருந்த கடத்தல் பொருட்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கக் கடத்தல் தொடர்பாக துப்பு கிடைத்ததை அடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.
துபாயில் இருந்து வந்த இருவரிடம் இருந்து 24 காரட் தங்கம், ஐபோன்கள் (iPhones), சிகரெட்டுகள் என சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 34 வயதான தமெமுன் அன்சாரி அப்துல் ரஷீத் (Thamemun Ansari Abdul Rashid), 46 வயதான சாதிக் அப்துல் மன்னன் (Sathik Abdul Mannan) ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்ட சுங்கத் துறை அதிகாரிகள் சந்தேகம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து பொருட்களை பறிமுதல் (seized) செய்தனர்.
12 லட்சம் மதிப்புள்ள தங்கம் (gold) எப்படி பிரித்துக் கொண்டு வரப்பட்டது தெரியுமா? 98 கிராம் மதிப்புள்ள இரண்டு துண்டுகளாகவும், 169 கிராம் எடை கொண்ட பேஸ்ட் பண்டலில் 142 கிராம் தங்கமாகவும் (gold) கொண்டு வரப்பட்டிருந்தது.
இதோடு, ஐபோன்கள், விலையுயர்ந்த பிராண்ட் வகை சிகரெட்கள், பயன்படுத்திய கணினிகள் (desktops) என 10.66 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் துபாயில் (Dubai) இருந்து கொண்டு வரப்பட்டிருந்தன.
தமெமுன் அன்சாரி அப்துல் ரஷீத் மீது ஏற்கனவே குற்ற பின்னணி இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.
Also Read | NIA: கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் கைது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR