OLX மூலம் வேலைவாங்கி தருவதாக போலியாக விளம்பரம் செய்ததை நம்பி ஏமாந்து பணத்தை இழந்த பலர், தொடர்ச்சியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக புகார்கள் அளித்து வந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது சம்பந்தமாக விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சைபர்கிரைம் ADSP திரு சுந்தரம் அவர்கள் மேற்பார்வையில் ஆய்வாளர் திருமதி. வசந்தி புலன் விசாரணை மேற்கொண்டார். 


விசாரணயில் OLX இல் பல்வேறு பெயர்களில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபர் நடைக்காவு பகுதியை சார்ந்த  நேசையன் என்பவரது மகன் சுரேஷ் (வயது 41) என்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீஸார் குற்றவாளியை தேடிவந்த நிலையில், சைபர் கிரைம் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


ALSO READ | குடிபோதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட தலைமை காவலர் பணி நீக்கம்


அவரிடம் நடத்திய விசாரணையில் பல நபர்களை ஏமாற்றியதை ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக குற்றவாளியின் வங்கி கணக்கு விபரங்களை வைத்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். 


ALSO READ | பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த கொலை முயற்சி குற்றவாளிகள் கைது..!!! 


ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி சம்பந்தமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்ச்சியாக மாவட்ட காவல்துறை சார்பில் பல சமயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இது போன்று பணத்தை கொடுத்து ஏமாறுபவர்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | கோவை மாணவி தற்கொலை வழக்கு: கைதான ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR\