குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில், அதிகரித்து வரும் சைபர் குற்றங்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசின் கடமை என்றாலும், சைபர் குற்றங்களைத் தடுக்கவும், குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ  | Forbes-ன் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!


சைபர் குற்றங்களை திட்டமிட்ட ஒருங்கிணைப்பின் மூலம் எதிர்கொள்ளும் வகையில் ‘இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம்’ ஒன்றை மத்திய அரசு நிறுவியிருப்பதாக தெரிவித்துள்ள அவர், டெல்லி துவாரகாவில் ‘தேசிய சைபர் தடயவியல் ஆய்வகம்’ ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். சைபர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


ALSO READ | ₹2000 நோட்டின் புழக்கம் குறைந்தது ஏன்; மத்திய அரசு கூறுவது என்ன..!!


சைபர் குற்றங்கள் நிகழ்ந்தால், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இந்தவகை குற்றங்கள் நிகழ்ந்தால், அவர்கள் எந்தவித தயக்கமோ தடையோ இல்லாமல் புகார் அளிக்க தனியாக இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.cybercrime.gov.in என்ற போர்ட்டலில் புகார் பெறப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட மாநில அரசே விசாரணையை தொடரும்.  இதுதவிர பணமோசடிகள் பற்றிய புகார்களை உடனடியாகத்  தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி வசதி (155260 ) செய்து தரப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்ற விசாரணைகளை விரைவுபடுத்த பயிற்சியுடன் கூடிய தடயவியல் ஆய்வகங்கள் 28 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையங்களில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்ட  காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதிலளித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR