நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்: எச்சரிக்கை நிலையில் NDRF
தற்போது, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகன மழை மற்றும் சூறாவளிக்கான எச்சரிக்கை இருப்பதால் ஆறு NDRF குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள சூறாவளி புயல் எச்சரிக்கையை அடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மைப் படையின் (NDRF) ஆறு அணிகள் திங்களன்று கடலூர் மற்றும் சிதம்பரத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளன.
பேரிடர் காலங்களில் NDRF ஆற்றும் உடனடி மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர் மற்றும் சொத்துகளுக்கு பெரும் பாதுகாப்பை அளிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மெற்கொள்வதிலும் இக்குழுவின் திறமை நாடறிந்த ஒன்றாகும். தற்போது, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகன மழை மற்றும் சூறாவளிக்கான எச்சரிக்கை இருப்பதால் ஆறு NDRF குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
"புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கே 600 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 630 கிமீ தொலைவிலும் தென்மேற்கு மற்றும் அருகிலுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது" என்று IMD தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைந்து தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இது நவம்பர் 25 பிற்பகலுக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி இன்று முன்னதாக அறிவித்தது.
"தென்மேற்கு வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைந்து தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இது நவம்பர் 25 பிற்பகலுக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது" என்று ஐ.எம்.டி சென்னையின் எஸ்.பாலசந்திரன் கூறினார்.
ALSO READ: "வருகிறது நிவர் புயல்...!!!" என்ன செய்ய வேண்டும்? , செய்யக்கூடாது?...
ஞாயிற்றுக்கிழமை, IMD, தென்மேற்கு அரேபிய கடல் (Arabian Sea) மீது மையம் கொண்டிருந்த மிகக் கடுமையான சூறாவளி புயல் மேற்கு நோக்கி நகர்ந்ததாகக் கூறியது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையிலும், புயல் கடலைக் கடக்கும் இடங்களிலும் நவம்பர் 25 ஆம் தேதி காற்று 100 கி.மீ வேகத்தில் வீசும் என்று ஒரு புல்லட்டின் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீன்பிடிக்க ஏற்கனவே புறப்பட்ட மீனவர்களும் திரும்பி வருமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தென் கடலோர ஆந்திர பிரதேசம், ராயலசீமா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளிலும் நவம்பர் 25 முதல் 26 வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: தமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை: 24, 25 தேதிகளில் அதிகனமழையுடன் வரும் நிவர் புயல்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR