தமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை: 24, 25 தேதிகளில் அதிகனமழையுடன் வரும் நிவர் புயல்
வானிலை ஆய்வுத் துறை அரசுக்கு அளித்த சூறாவளி எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA), மீனவர்களுக்கு நவம்பர் 25 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தது.
சென்னை: தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையில் ஒரு சூறாவளி புயல் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) திங்களன்று தெரிவித்துள்ளது.
"தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைந்து தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இது நவம்பர் 25 பிற்பகலுக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது" என்று ஐ.எம்.டி சென்னையின் எஸ்.பாலசந்திரன் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை, IMD, தென்மேற்கு அரேபிய கடல் மீது மையம் கொண்டிருந்த மிகக் கடுமையான சூறாவளி புயல் மேற்கு நோக்கி நகர்ந்ததாகக் கூறியது.
"தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தீவிர காற்றழுத்தம் தொடர்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மேலும் அழுத்தத்தைக் கூட்டி, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது" என IMD எச்சரித்துள்ளது.
புயலை எதிர்பார்த்து, அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் காரைக்கால் போன்ற மாவட்டங்களில் சூறாவளிக்கு முந்தைய கண்காணிப்பு மற்றும் அதிக மழை எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
ALSO READ: தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: வருகிறது நிவர் புயல், அதிகன மழைக்கான வாய்ப்பு
வானிலை ஆய்வுத் துறை அரசுக்கு அளித்த சூறாவளி (Cyclone) எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA), மீனவர்களுக்கு நவம்பர் 25 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தது.
வடக்கு தமிழ்நாட்டின் கடற்கரைகளில் 18 அடி உயரத்திலும் தெற்கு தமிழகத்தில் 9.8 அடி உயரத்திலும் கடல் அலைகள் சீற்றத்துடன் இருக்கக்கூடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 24 ஆம் தேதி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் சென்னை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குரிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்யும்.
நவம்பர் 25 ஆம் தேதி, கடலூர், கள்ளக்குரிச்சி, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் போன்ற மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: அலையின் உயரம் 8 அடி முதல் 18 அடி வரை இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR