அலையின் உயரம் 8 அடி முதல் 18 அடி வரை இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அறிவுறுத்தியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 22, 2020, 07:48 PM IST
  • அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
  • கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை கடல் அலையின் உயரம் 8 அடி முதல் 18 அடி இருக்கும்.
  • கொளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலையின் உயரம் 4.9 அடி முதல் 9.8 அடி வரை இருக்கும்.
  • ஏற்கனவே மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்களும் திரும்பி வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தில்.
அலையின் உயரம் 8 அடி முதல் 18 அடி வரை இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் title=

சென்னை: கடல் சீற்றமாக ருப்பதால் கடல் அலையின் உயரம் அதிக அளவில் இருக்கும். இதனால் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை (Tamil Nadu State Disaster Management Authority) அறிவுறுத்தியுள்ளது.

அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "வட தமிழக கடலோர பகுதிகளான கோடியக்கரை (Point Calimere) முதல் பழவேற்காடு (Pulicat) வரை 22.11.2020 அன்று 17.30 மணி முதல் 25.11.2020 வரை 23.30 மணி வரை கடல் அலையின் உயரம் 8 அடி முதல் 18 அடி வரை கடல் சீற்றமாக இருக்கக்கூடும்". எனவே மீனவர்கள் (Fishermen) கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

 

மற்றொரு டிவிட்டர் பதிவில், "ரில்தென் தமிழக கடலோர பகுதிகளான கொளச்சல் (Kolachal) முதல் தனுஷ்கோடி (Dhanushkodi) வரை 22.11.2020 அன்று 17.30 மணி முதல் 25.11.2020 வரை 23.30 மணி வரை கடல் அலையின் உயரம் 4.9 அடி முதல் 9.8 அடி வரை கடல் சீற்றமாக இருக்கக்கூடும்". எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

 

வங்கக் கடலில் உருவாகும் "நிவர்" புயல் தமிழக கரையை (Tamil Nadu Coast) நோக்கி நகர்ந்து வருகிறது. இது காரைக்கால் - மாமல்லபுரம் (Karaikal and Mahabalipuram) இடையே வரும் 25 ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

ALSO READ |  கரையை நோக்கி நகர்ந்து வரும் Cyclone Nivar - பொதுமக்களுக்கு TN SDMA வேண்டுகோள்

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையிலும், புயல் கடலைக் கடக்கும் இடங்களிலும் நவம்பர் 25 ஆம் தேதி காற்று 100 கி.மீ வேகத்தில் வீசும்” என்று ஒரு புல்லட்டின் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீன்பிடிக்க ஏற்கனவே புறப்பட்ட மீனவர்களும் திரும்பி வருமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ALSO READ |  தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: வருகிறது நிவர் புயல், அதிகன மழைக்கான வாய்ப்பு

தென் கடலோர ஆந்திர பிரதேசம், ராயலசீமா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளிலும் நவம்பர் 25 முதல் 26 வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News