ஃபானி புயல்: ஒடிஷாவுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கியது தமிழக அரசு
ஃபானி புயல் பாதிப்புக்கு ரூ.10 கோடி நிவாரணத்தை தமிழக அரசு வழங்கியது.
ஃபானி புயல் பாதிப்புக்கு ரூ.10 கோடி நிவாரணத்தை தமிழக அரசு வழங்கியது.
கடந்த 3-ம் தேதி ஒடிசாவின் புரி பகுதியில் ஃபானி புயல் கரையை கடந்தது. இதனால் 14 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. 14 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. லட்சக்கணக்கான வீடுகளும், மின்கம்பங்களும் கடுமையான பாதிப்பை சந்தித்தன. மேலும் புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது.
மாநில அரசின் முதற்கட்ட கணக்கெடுப்பில் 30 சதவீதத்திற்கு அதிகமான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் 1 லட்சம் ஹெக்டேருக்கு அதிகமான நிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஃபானி புயல் பாதிப்புக்கு ரூ.10 கோடி நிவாரணத்தை தமிழக அரசு வழங்கியது. ஃபானி புயல் பாதிப்புக்கு ரூ.10 கோடி உதவி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளர் மொகந்தியிடம் நிதி செயலாளர் சண்முகம் காசோலையை வழங்கினார்.