Cyclone Fengal, Tamilnadu Latest Update | வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சல்/ஃபெஞ்சல் (Fengal Cyclone) புயல் இப்போது சென்னையில் இருந்து 190 கிமீ தொலைவில் இருக்கிறது. 7 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த புயல் பிற்பகல் மாலை 4 மணி அளவில் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80-90  கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும். முன்னெச்சரிக்கையாக, மாமல்லபுரம் அதன் சுற்று வட்டார பகுதியான பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. IT ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாநகர பேருந்து சேவை வழக்கம்போல் இயங்கும், அதேநேரத்தில் சென்னை மெரினா கடற்கரை சாலை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளி கல்லூரிகள் விடுமுறை


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


ரெட் அலெர்ட் மாவட்டங்கள் 


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அரியலூர், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | Fengal Cyclone: பேய் மழை கொட்டப்போகுது!! ‘இதை’ எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க மக்களே..


மருத்துவ முன்னெச்சரிக்கை : 


1. குறுகிய காலத்தில் பிரசவ தேதி எதிர்பார்க்கப்படும் தாய்மார்கள் ( EDD mothers) முன்னரே, மருத்துவமனையில் தாமதமின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


2. தகுந்த மருந்து மாத்திரைகள், பாம்பு கடி விஷமுறிவு ஊசி (ASV) மற்றும் ப்ளீச்சிங் பவுடர் ஆகியவற்றை இருப்பு வைக்க உரிய வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டுள்ளது.
3. மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள சுகாதார நிலையங்களில் தகுந்த முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4. தகுந்த மருத்துவ நிவாரண முகாம்கள், தேவைப்படின் அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
5. மேலும், தற்பொழுது நடைபெற்று வரும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தேவைக்கேற்ப அதிகரிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6. அரசின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்கள், விழிப்புணர்வுடன் செயல்பட்டு அவசர மருத்துவ சேவைகளுக்காக எண். 108-ஐ தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


புயலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை


செய்ய வேண்டியவை


* வீட்டிலுள்ள பெயர்ந்த ஓடுகளை ஓமென்ட் கொண்டு சரிசெய்யவும். கதவுகள் மற்றும் ஜன்னல்களை சீரமைக்கவும். வீட்டின் சுற்றுப்புறத்திலுள்ள இற்று போன பழைய மரங்களை அகற்றவும், காற்றில் பறந்து செல்ல வாய்ப்புள்ள பெயர்ந்த செங்கல், ஓடுகள், குப்பைத்தொட்டிகள் பதாகைகள் முதலியவற்றை ஸ்திரப்படுத்தவும்.


* கண்ணாடி ஜன்னல்களை பாதுகாக்க மரப்பலகைகளை கைவசம் வைத்திருக்கவும். மரப்பலகைகள் கைவசமில்லையெனில், கண்ணாடியின் மீது ப்ளாஸ்டர் டேப்புகளை ஒட்டிவைக்கவும், இது கண்ணாடி தெறி தெறிப்பதை தவிர்க்க உதவும்.


* மண்ணெண்ணை நிரப்பிய அரிகென் விளக்கு பேட்டரி உல்ல டார்ச் விளக்கு மற்றும் சில உலர்ந்த பேட்டரிகளை கைவசம் வைத்திருங்கள். பாழடைந்த கட்டிடங்களை இடித்துவிடவும்.


* வானொலிபெட்டியின் மூலம் வழங்கப்படும் வானிலை எச்சரிக்கைகளையும். வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து கவனிக்கவும், மற்றவர்களுக்கும் அவற்றை எடுத்துரைக்கவும். வானொலி மூலம் பெறப்படும் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே பிறரிடம் கூறவும். சீற்றமான உயர் அலைகளால் அடித்து செல்ல வாய்ப்புள்ள தாழ்வான கடற்கரை பகுதிகளிலிருந்து விரைவாக வெளியேறவும்.


* உங்கள் வீடு, உயர் அலைகளினாலும், ஆற்று வெள்ளத்தினாலும் பாதிக்கப்படவாய்ப்பில்லை எனில் சாலச்சிறந்தது.. எனினும், காலி செய்ய்யுமாறு அறிவுறுத்தப்பட்டால், உடனடியாக காலிசெய்யவும். ஆற்று நீரொட்டதிற்கு அருகில் இருப்பவர்கள், கனமழையினால், வெள்ளத்தினால் சூழப்பட வாய்ப்பிருப்பதை அறியவும்.


* கைவசம் சிறிது கூடுதலான உணவு, குடிநீரை வைத்திருக்கவும். எளிதில் தயாரிக்ககூடியதாகவும். முடிந்தவரை சமைக்காமல் உண்ணக்கூடியதாகவும் இருந்தல் நலம். விலைமதிப்பான/முக்கியமான பொருட்களை வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய இடத்தில் இருப்பின் மேல் தளத்தில் வைத்திருத்தல் நலம்.


* நிவாரண முகாம்களில் இருப்பவர்கள் சம்பந்தபட்ட அதிகாரிகள் கேட்டுக்கொள்ளும் வரை வீடு திரும்பாமல் பாதுகாப்பு முகாம்களிலேயே இருக்கவும். விளக்கு கம்பங்களிலிருந்து பிடிமானமின்றி தொங்கும் மின்சார வயர்களை தொடக்கூடாது. பஸ்கள், கார்கள், வாரிகள் மற்றும் வண்டிகளை கவனமாக இயக்கவேண்டும். இறப்புகள் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.


செய்யக் கூடாதவை.


* வதந்திகளை நம்பக்கூடாது. சம்பந்தபட்ட அதிகாரிகள் கேட்டுகொள்ளாதவரை பாதுகாப்பு முகாம்களை விட்டு வெளியேவரக்கூடாது. புயலுக்கு இடையில் நிலவும் அமைதியான நேரத்தில் வெளியேவரக் கூடாது. விளக்கு கம்பங்களிலிருந்து பிடிமானமின்றி தொங்கும் மின்சார வயர்களை தொடக்கூடாது. ஏனெனில் அதில் மின்சாரம் பாய வாய்ப்புள்ளது.


* கடல் சீற்றமாக இருக்குமாதலால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது. வளர்ப்புபிராணிகளை நிறந்தவெளியில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.


மேலும் படிக்க | நாகையில் புயல் காரணமாக 50 கோடி ரூபாய் மீன் வர்த்தகம் பாதிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ