நிவார் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கக் கடலில் உருவாகிய 'நிவர்' புயல் (Cyclone Nivar) அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. மணிக்கு சுமார் 120 முதல் 145 கி.மீ., வேகத்தில், இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் (Puducherry) நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, பேருந்து மற்றும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது. மேலும், மக்கள் நடமாட்டத்தை தவிர்க்க தமிழகம் (Tamil Nadu) மற்றும் புதுச்சேரி முழுதும், இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


'நிவர்' புயல் காரணமாக நேற்று முன்தினம் முதல், சென்னை உட்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்து (Heavy rain) வருகிறது. புயல் மற்றும் மழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தாழ்வான பகுதி மற்றும் மழை நீர் தேங்கும் பகுதிகளில் உள்ள மக்களை, நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.


ALSO READ | புயல் தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்கு Helpline Numbers விவரங்கள்


மேலும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று மதியம், தென் மேற்கு வங்கக் கடலில், மூன்று மணி நேரமாக நிலை கொண்டிருந்த 'நிவர்' புயல், அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இது இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




புயல் கரையை கடக்கும் போது, 100 முதல் 145 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டங்களில், கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு மக்கள் உதவிக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று மாநில அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று மதியம் முதல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அரசு பேருந்து போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


ALSO READ | தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!


நிவர் புயலானது தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 310 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 370 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.  புயல் கரையை கடக்கும் போது 120 கி.மீட்டர் முதல் 130 கி.மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும். சமயங்களில் 140 கி.மீட்டர் வரையும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிவர் புயல் தற்போது மணிக்கு 6.கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.


புயல் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.