சென்னை எழும்பூர் - கொல்லம் இடையேயான தினசரி ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் தினந்தோறும் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்பட்ட இந்த ரயில் சேவையை தினசரி இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டாக கோரிக்கை வைத்து வந்தனர். 


இதையடுத்து சென்னை - கொல்லம் ரயில் இடையே வழக்கமான கட்டணத்துடன் கூடிய தினசரி ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. 16101 எண் கொண்ட இந்த ரயில் தினமும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில்  இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது.  மறுமார்க்கத்தில், ரயில் எண்.16102 கொல்லத்தில் இருந்து காலை 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை, ராஜபாளையம்,  தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லம் சென்றடைகிறது.