`தீண்டாமையை கடைபிடிக்கும் பெரியார் பல்கலை., துணைவேந்தரை நீக்குக` - தலித் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாத பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது தலித் சமூகத்தினருக்கான பேராசிரியர்கள் இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக கூறி, அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமன இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்துள்ளதாகவும் தீண்டாமையை கடைபிடிக்கும் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் இன்று (செப். 25) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் படிக்க | அரசியலின் குரல்வளையை ஆன்மீகமும் ஆன்மீகத்தின் குரல்வளையை அரசியலும் பிடிப்பது தகாது!
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசை கண்டித்தும், உயர் கல்வித் துறையை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாநிலத் தலைவர் ஜங்சன் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இட ஒதுக்கீடு விதிமுறைகளை களைய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் பதவி வழங்குவது ஏற்புடையது அல்ல என்றும் இந்த விஷயத்தில் சமூக நீதியை நிலைநாட்ட அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. எனவே தற்போது நடைபெற்றுள்ள பணி நியமனங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தலித் அமைப்புகளையும் ஒன்று சேர்த்து உயர் நீதிமன்றத்தை நாடி நீதி கேட்போம் என்றும் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
மேலும் படிக்க |தேச பாதுகாப்பில் விளையாடாதீர்கள் - திமுகவுக்கு முருகன் எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ