அழகாபுரம் காவல் நிலையம் அருகில் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் அழகாபுரம் காவல் நிலையம் அருகே தொடர்ந்து மூன்று துணிக்கடைகள்  உள்ளன. இந்த துணிக்கடைகளில் வழக்கம்போல நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடை உரிமையாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.


இந்த நிலையில் இன்று காலை கடை திறக்க வந்த கடை உரிமையாளர்கள் கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


இதனையடுத்து உடனடியாக அழகாபுரம் காவல் நிலையத்திற்கு கடை உரிமையாளர்கள் தகவல் கொடுத்தனர்.


இதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர்  கடையைத் திறந்து சோதனை மேற்கொண்டனர்.


அப்போது மூன்று கடைகளிலும் கொள்ளையர்கள் புகுந்ததும், அங்குள்ள பொருட்களை ஆராய்ந்து, இறுதியில் கல்லாபெட்டியில் 
3 கடைகளில் இருந்த சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. 


மேலும் அருகிலுள்ள மருந்து கடையிலும் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாயை திருடிசென்றுள்ளனர்.


 அருகிலுள்ள இரும்புக்கடையை உடைக்க முடியாததால் அதில் இருந்த ஆறு லட்ச ரூபாய் தப்பியுள்ளது  என்பது கூடுதல் தகவல்.


இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. கொள்ளையர்கள் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் கடைக்குள் நுழைவதும், அங்கிருந்து கடைகளில் உள்ள பெட்டிகளில் சோதனை இடுவதும், பணத்தை எடுத்துச் செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.



சிசிடிவி கேமராவில் உள்ள கொள்ளையர்கள் யார், அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும்  கைரேகை நிபுணர்களை வரவழைத்து திருடர்களின் கைரேகையையும் பதிவு செய்துள்ளனர்.


அழகாபுரம் காவல் நிலையம் அருகே இன்று அதிகாலை தொடர்ந்து மூன்று கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ALSO READ | சுனாமி: ஆறாத வடு... தீராத வலி.. ஆழிப்பேரலையின் 17-ம் ஆண்டு நினைவு நாள் 


ALSO READ | விழுப்புரம்: சிறுவன் இறந்த சம்பவத்தில் புதிய CCTV காட்சி வெளியீடு! சிக்கப்போகும் அந்த இருவர் யார்? 


ALSO READ | கள்ளக்காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR