மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த குடி நோயாளி பார்த்திபன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 40). இவருடைய மனைவி பெரியநாயகி(33). இவர்களுக்கு ஹேமஸ்ரீ(7), பிரகஸ்ரீ(4) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். 


மது குடிக்கும் பழக்கம் உடைய பார்த்திபன், திண்டிவனம் பாஞ்சாலம் சாலை பகுதியில் உள்ள குடிபோதை மற்றும் மனநோய் சிகிச்சை மையத்தில் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்காக சிகிச்சை பெற கடந்த மாதம் 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். 


மேலும் படிக்க | திருடிய பணத்தை திருப்பி கேட்டதால் சாகடிக்கப்பட்ட லாரி ஓட்டுநர்


இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி அன்று அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை மையத்தில் இருந்து பெரியநாயகியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பார்த்திபனுக்கு வலிப்பு வந்து திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.


இதையடுத்து பெரியநாயகி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று தனது கணவரை பார்த்தார். ஆனால் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பார்த்திபன் இறந்தார். இதில் பெரியநாயகி மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். 


மேலும் படிக்க | மே 5-ஆம் தேதி கோயம்பேடு சந்தை இயங்காது!


ஆனால் தனது கணவர் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் ரோஷணை போலீசில் பெரியநாயகி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR