உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் போட்டியிடுவதற்கு அனுமதி தரக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் டிடிவி தினகரன் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார். இன்று இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் 'அதிமுக அம்மா' என்ற பெயரை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் கொடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


 



 


இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், இறுதி உத்தரவு வரும் வரை அதிமுக அம்மா அணி என்ற பெயர் மற்றும் குக்கர் சின்னத்துடன் செயல்பட தாம் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னத்தில் தனி அணியாக தாங்கள் களம் காண விரும்புவதாகவும் டிடிவி தினகரன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இரட்டை இலைச் சின்னத்தை ஈபிஎஸ் –  ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, டிடிவி தினகரன் டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்த மனு ஏற்கனவே விசாரணையில் உள்ளது.


இந்நிலையில் இன்று மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் 'அதிமுக அம்மா' என்ற பெயரை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் கொடுத்துள்ளது. மேலும் ஒரு வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.