புதுடெல்லி: ரூ.1,76,000 கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராஜா, கனிமொழி மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட பிறர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்க துறை மேல்முறையீடுகள் செய்தன. அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றூக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29, 2020) விசாரணை நடத்தியது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விசாரணைக்கு பிறகு, நீதிபதி பிரிஜேஷ் சேத்தி தலைமையிலான டெல்லி உயர்நீதிமன்ற நீதிமன்ற பிரிவு, இந்த விவகாரம் அக்டோபர் 5 முதல் பிற்பகல் 2:30 மணிக்கு தினசரி விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.


2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பான சிபிஐ (CBI)  மற்றும் அமலாக்க துறை தாக்கல் செய்த வழக்குகளில் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் பிறரை சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 21, 2017 அன்று விடுவித்தது.


மேலும் படிக்க | 11 லட்சம் கிலோ மீட்டர் சுற்றி ஓய்ந்த INS VIRAAT..!!!


2 ஜி ஊழல் விசாரணையில் போடப்பட்ட மற்ற வழக்கில் எசார் குழுமத்தின் ரவி காந்த் ருயா மற்றும் அன்ஷுமான் ருயா, லூப் டெலிகாம் நிறுவனத்தின் ஐ பி கைதன் மற்றும் கிரண் கைதன் மற்றும் வேறு நான்கு பேரையும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.


காங்கிரஸ் தலைமையிலான, UPA, அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உட்பட 14 பேர் மீதும், மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Gilgit-Baltistan தேர்தல்: சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கும் பாக்.கின் தில்லாலங்கடி..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR