Delta Plus variant: கொரோனா வைரஸ் தொற்றின் டெல்டா பிளஸ் திரிபு (Delta Plus variant) குறித்த அச்சம் அனைவரது மனங்களையும் ஆக்கிரமித்து உள்ளது. இது குறித்த பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் எடுத்து வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த டெல்டா பிளஸ் வைரஸ் ((Delta Plus Variant) திரிபு முதலில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருவது கண்டறியப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் ஒன்பது பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 


ALSO READ: Delta Plus Variant அறிகுறிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சை: முழு விவரம்


இந்நிலையில் தற்போது டெல்டா பிளஸ் கொரோனா பரிசோதனை மையங்களை சென்னை, மதுரை, கோவை நகரங்களில் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.,


திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்தபோது கொரோனா பரவல் மிகுந்து இருந்தது. அதனை கட்டுப்படுத்தி, ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்து மீண்டும் மூன்றாம் நிலையில் அதன் பற்றாக்குறை நிரந்தரமாக ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் இதன் ஒரு பகுதியாக மதுரையில் நான்கு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது இரண்டு செயல்பட்டு வருகிறது. 


பெங்களூருவில் உள்ள டெல்டா பிளஸ் கொரோனா பரிசோதனை மையம்போல் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் டெல்டா ப்ளஸ் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் இவ்வாறு அவர் கூறினார்.


ALSO READ: TN Delta Plus Corona: தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR