விவசாயிகளை பெருமைப்படுத்தவே வேளாண் துறை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம்!
வரலாற்றின் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார் தமிழக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
சென்னை: வரலாற்றின் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்து வருகிறார் தமிழக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நேற்று முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது. சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்தன. குறிப்பாக பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.
திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.
வேளாண் துறையை உழவர் நலத்துறை என பெயர் மாற்றி அறிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். வேளாண் என்ற சொல்லுக்கு உதவி என்று பொருள் என தெரிவித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். மேலும் வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் வேளாண் உழவர் நலத்துறை என பெயர் மாற்றபட்டுள்ளது என்றார். 18 மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்ட பின்னரே இந்த விவசாய பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.
தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவு தன்னிறைவில் தமிழகம் ஒரளவு எட்டியுள்ளது. 10 லட்சம் எக்டர் அளவு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த 10 ஆண்டில் ஒரு மடங்காக உயர்த்தப்படும். வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனி பிரிவு ஒன்று உருவாக்கப்படும். கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
மேலும், டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்காக வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் என்றும் தெரிவித்தார் .
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR