சென்னை: புதுச்சேரியில் (Puducherry) முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் (AIADMK MLA) ஈடுபட்டுள்ளனர். வில்லியனூர்- விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு (MGR Statue) மர்மநபர்கள் காவித்துணியை போர்த்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக எம்.ஜி.ஆர்.சிலையில் இருந்த காவி துணியை அகற்றி, அவருக்கு மாலை அணிவிகிகப்பட்டது,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



இந்த சம்பவத்தை அடுத்து, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்டதற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 


அவர் கூறியது, "தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் (M. G. Ramachandran) அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


ALSO READ | "பெரியார்" சிலையை சேதப்படுத்திய சமூக விரோத சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்


தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசினை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். 


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 


 



அண்மை காலங்களில் தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது தொடர்கதையாக உள்ளது. சில நாட்களுக்கு முன்னால் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் (Periyar) சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றினார்கள். இது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திருந்த நிலையில், ஈரோட்டிலும் பெரியார் சிலையை சேதப்படுத்த முயன்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது,