தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி மையம். இங்கு எலக்டிரீசியன், ஃபிட்டர், என பல்வேறு பிரிவுகளில் சுமார் 560 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதே தொழிற் பயிற்சி மையத்தில் கணினி இயக்கம் மற்றும் திட்டமிடும் உதவியாளர் படிப்பில் பயின்று வரும் மாணவர்தான் 19 வயதான கார்த்திக். வைகை அணை அருகே உள்ள குருவியம்மாள்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் பிறவியிலேயே ஒரு மாற்று திறனாளி. தந்தை அழகுசிங்கம் மற்றும் தாய் அமுதா இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எழுந்து நிற்க; நடக்க முடியாத கார்த்திக்கை வீட்டில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் இருக்கும் அரசு தொழிற்பயிற்சி மையத்திற்கு அவரது தந்தைதான் தினமும் தூக்கி கொண்டு வருவார். வகுப்பறையில் இருக்கும்போது இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும் என்றால்கூட நண்பர்களின் உதவி இல்லாமல் கார்த்திக்கால் செல்லமுடியாது. இதனால் அவரின் நிலைமையை உணர்ந்த அவரது நண்பர்கள் கார்த்திக்கிற்காக பிரத்தியேகமான சோலார் வாகனம் வடிவமைத்து கொடுத்திருக்கிறார்கள். அது இன்று கார்த்திக்கின் வாழ்க்கையை பிரகாசமாக்கியுள்ளது.



இந்த அரசு தொழிற்பயிற்சி மையத்தில் எலக்ட்ரீசியன் பிரிவில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் புது புது படைப்புகளை வடிவமைத்து சமர்ப்பிப்பது வழக்கம். அந்த வகையில் அப்பிரிவைச் சேர்ந்த 12 மாணவர்கள் தங்களது படைப்பு மூலம் தங்களுடன் பயின்று வரும் சக நண்பன் கார்த்திக்கிற்கு உதவிகரமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்து சோலார் மூலம் இயங்கும் புதிய வாகனத்தை வடிவமைத்துள்ளனர். 


12 வாட்ஸ் உடைய இரண்டு சோலார் பேனல்கள் ; கணினிக்கு பயன்படுத்தப்படும் நான்கு பேட்டரிகள் ; 250 வாட்ஸ் திறன் உள்ள மோட்டார் சைக்கிளுக்கு பயன்படுத்தப்படும் நான்கு சக்கரங்கள் ; முகப்பு விளக்கு ; என 25 கிலோ எடையில் பிரத்தியேகமான புதிய வாகனத்தை உருவாக்கியுள்ளனர். அதில், கார்த்திக் யாருடைய உதவியும் இன்றி வாகனத்தில் ஏறி பயணிக்கும் விதமாக வெறும் 21 இன்ச் உயரத்தில் இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.



மழை மற்றும் கோடை காலங்களில் இயங்கும் விதமாகவும்; சூரிய ஒளி மற்றும் மின்சக்தி மூலமாக இயங்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட இந்த சோலார் வாகனம், மூன்று மாத கால விடா முயற்சியால் உருவாக்கப்பட்டது. இருபத்தி நான்காயிரம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த வாகனம் அதிகபட்சமாக 20 கிமீ வேகத்தில் செல்லும். இந்த வாகனத்தை ஒருமணி நேரம் சார்ஜ் செய்தால் 20 கிமீ வரை பயணிக்கலாம். நான்கு ஏக்கருக்கு மேல் பரப்பளவு உள்ள இந்த அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பெறும் சிரமப்பட்டு வந்த கார்த்திக்கிற்கு; இந்த வாகனம் பெரிதும் உதவியாகவும் எளிதாகவும் இருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். தற்போது தொழிற்பயிற்சி மையத்திற்குள் மட்டுமே கார்த்திக் பயன்படுத்தி வரும் இந்த வாகனம் இவ்வாண்டு நிறைவு பெற்ற பின், கார்த்திக் இடமே வழங்க உள்ளதாக அவரது ஆசிரியர் தெரிவித்துள்ளனர். 



கார்த்திக்கின் சிரமத்திற்கு உருவம் கொடுத்த சக மாணவர்கள், சிரமத்தை உடைத்தெறிந்து புன்னகையோடு அவரை நடைபோட வைத்திருக்கிறார்கள். சகஜமான வாழ்க்கையில் சாதிக்க முடியாமல் தவிக்கும் ஏராளமான மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்க்கையில் இந்த கண்டுபிடிப்பு நிச்சயம் கைக்கொடுக்கும் என நம்பலாம். 


படிப்பவர்களுக்கு புத்தகம்தான் துணை, உழைப்பாளிக்கு கடின உழைப்புதான் துணை; அதுபோல் கார்த்திக்கின் நண்பர்கள் உருவாக்கி கொடுத்து இந்த சோலார் வாகனம்தான் இனி அவருக்கு துணையாக இருந்து காத்திக்கின் எதிர்கால கனவுகளை நிறைவேற்றப்போகிறது. இதனை சாதித்த கார்த்தின் நண்பர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR