COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இரண்டாவது அலை பெரிய அளவில் பரவியதால், தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர, முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று பாதிப்பு  குறைந்து வருவதைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களை இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் ஜூன் 28-ம் தேதி ஊரடங்கு (Lockdown) முடிவடைய இருந்த நிலையில் ஜூலை 5-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மாவட்டங்களை 3 ஆக வகைப்படுத்தப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கேற்ப கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.


அந்த வகையில்,  3-ம் வகை மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களில்  அத்தியாவசிய பணிகள் அல்லாத பிற அரசுத் துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுள்ளது. மால்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகியவற்றுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி வழங்கபப்ட்டுள்ளது. அதே போன்று, ஜவுளி, நகை கடைகளுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


ALSO READ | தமிழகத்தில் கூடுதலாக 23 மாவட்டங்களில் பஸ்கள் போக்குவரத்து தொடங்கியது


இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் மக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். மசூதிகளிலும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். தேவாலயங்களுக்கு சென்று கிறிஸ்துவர்கள் வழிபட்டனர். 


தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். அவர்களது தெர்மல் ஸ்க்ரீனிங் செய்யப்பட்ட பின்னரே, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.  ஆனால், கோயில்களில் அர்ச்சனை செய்ய அனுமதி இல்லை. மேலும், விபூதி, குங்கும பிரசாதங்களை பொட்டலங்களில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ALSO READ:TN Lockdown: ஜூலை 5 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மு.க. ஸ்டாலின் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR