பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு - பக்தர்கள் ஏமாற்றம்
பழனி முருகன் கோயிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக அங்கு விற்கப்படும் பஞ்சாமிர்தம் பலரின் விருப்பம். தற்போது சபரிமலை சீசன் என்பதாலும் தைப்பூசத் திருவிழா நெருங்கும் நிலையில் இருப்பதாலும் தற்போதையிலிருந்தே பாதயாத்திரை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இந்நிலையில் கோயில் சார்பில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் அரை கிலோ கொண்ட பெட்டிகள் 35 ருபாய் ,அரை கிலோ சீல்டு பெட்டி 40 ரூபாய்க்கும் தூய்மையான முறையில் இயந்திரம் மூலம் கைப்படாமல் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.பாத விநாயகர் கோயில், ரோப் கார் நிலையம், சுற்றுலா வாகனம் நிறுத்துமிடம்,மின் இழுவை ரயில் நிலையம் எதிரே உள்ள விற்பனை நிலையம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை கூடங்கள் அமைத்து விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது பல்வேறு இடங்களில் கோயில் சார்பில் விற்பனை செய்யும் பஞ்சாமிர்த கூடங்களில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் இன்று காலை முதல் பஞ்சாமிர்தம் வாங்க முடியாமலும் ஏமாற்றத்துடன் தனியார் கடைகளில் வாங்கிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.உடனடியாக பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் கிடைக்க கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் மருத்துவத்துறையில் திமுக அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்கள்!
மேலும் படிக்க | காலநிலை மாற்றம் : இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு - முன்னெடுப்புகள் என்னென்ன?
மேலும் படிக்க | நரிக்குறவரின் ஒரு மாத குழந்தையை அப்புறப்படுத்திய நகராட்சி ஊழியர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ