நரிக்குறவரின் ஒரு மாத குழந்தையை அப்புறப்படுத்திய நகராட்சி ஊழியர்கள்!

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை அருகே ஆக்கிரப்பு அகற்றுவதாக கூறி நரிக்குறவரின் ஒரு மாத குழந்தையை அப்புறப்படுத்தி சாலையில் வைத்த நகராட்சி ஊழியர்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 26, 2022, 06:04 PM IST
  • சாலையோரத்தில் சிறு குடில் அமைத்து தங்கி இருந்த நரிக்குறவர் கூடாரங்களை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
  • போலீசாரின் பாதுகாப்புடன் திடீரென அங்குள்ள கடைகளையும் வாகனங்களையும் அகற்றினர்.
  • நகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
நரிக்குறவரின் ஒரு மாத குழந்தையை அப்புறப்படுத்திய நகராட்சி ஊழியர்கள்! title=

செங்கல்பட்டு மாவட்ட தலைநகரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனை அருகே சாலை ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் சிறு பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர் மேலும் வேன் ஸ்டாண்ட் உள்ளிட்டவையும் இங்கு வைத்துள்ளனர் தற்போது நகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் நூற்றுக்கு மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் திடீரென அங்குள்ள கடைகளையும் வாகனங்களையும் அகற்றினர் அப்போது அங்கு கடை வைத்திருப்பவர்களும் நரிக்குறவர் இன மக்களும் நகராட்சி அதிகாரிகளுடன் முன்னறிவிப்பின்றி அகற்றுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு! எச்சரிக்கை!

இதனைத் தொடர்ந்து சாலையோரத்தில் சிறு குடில் அமைத்து தங்கி இருந்த நரிக்குறவர் கூடாரங்களை நகராட்சி அதிகாரிகள் அகற்றினார் அப்போது அங்கு நரிக்குறவர் ஒருவரின் ஒரு மாத குழந்தை இருந்துள்ளது அதை நகராட்சி ஊழியர்கள் குண்டுகட்டாக தூக்கி வந்து பச்சிளம் குழந்தை எனும் பாராமல் சாலையின் நடுவே வைத்து சென்றனர்.

இதைக் கண்ட குழந்தையின் தாய் கதறி அழுத காட்சி அங்குள்ள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது பச்சிளம் குழந்தை என கூட பாராமல் நகராட்சி ஊழியர்கள் சாலையில் எடுத்துக் கொண்டு வந்து வைத்துள்ளனர் எனவே நகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை அருகே ஆக்கிரப்பு அகற்றுவதாக கூறி நரிக்குறவரின் ஒரு மாத குழந்தையை அப்புறப்படுத்தி சாலையில் வைத்த நகராட்சி ஊழியர்களின் அலட்சிய போக்கினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | சிசிடிவியில் சிக்கிய ஹெல்மெட் திருடும் ஆசாமி! தீவிரமாக தேடும் காவல்துறை

மேலும் படிக்க | உஷார் மக்களே!! இடி மின்னலுடன் கூடிய மழை, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News