Dharmapuri Lok Sabha Election Result 2024: தருமபுரி மக்களவைத் தொகுதி லேட்டஸ்ட் அப்டேட்
Dharmapuri Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பாமக, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டன.
Dharmapuri Tamil Nadu Lok Sabha Election Result 2024: தருமபுரி தமிழகத்தில் முக்கியமான மாவட்டமாக உள்ளது. பாமகவின் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளில் தருமபுரியும் ஒன்று. தர்மபுரியை பொருத்தவரை பாமக சாதிய அமைப்பு ரீதியாக உள்ள வாக்காளர்களை முன்வைத்தே அங்கு களம் காண்கிறது. இந்தத் தொகுதியில் 2019 ஆம் ஆண்டில் 80.49% வாக்குகள் பதிவானது. இந்த ஆண்டு 81.48 சதவீதம் பதிவாகி உள்ளது. 1989 முதலே பாமக இங்கு வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்து வந்தது. பாரிமோகன், பு.த.இளங்கோவன், செந்தில் என பலரும் இந்த தொகுதியின் எம்பியாக இருந்துள்ளனர். தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு, அரூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் மக்களவை தொகுதிகள் வருகின்றன.
தர்மபுரி மொத்த வாக்காளர்கள்
மொத்த வாக்காளர்கள் :15,24,896
ஆண் வாக்காளர்கள் : 7,70,897
பெண் வாக்காளர்கள் :7,53,820
மூன்றாம் பாலினத்தவர் : 179
வேட்பாளர்கள் யார் யார்?
தருமபுரி மக்களவைத் தொகுதியில் இந்த ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் அசோகன், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஏ.மணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக 4 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் மற்றும் அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
கடந்த 2019 மக்களவை தேர்தலில் தர்மபுரியில் கடும் போட்டி நிலவியது. திமுகவை சேர்ந்த செந்தில்குமார் 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணியை தோற்கடித்து வெற்றி பெற்றார். இவர் மொத்தமாக 5,74,988 வாக்குகள் பெற்று இருந்தார். அதே சமயம் அன்புமணி 5,04,235 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதே தொகுதியில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ல் பாமக அதிமுக கூட்டணியில் இருந்த போதிலும் திமுக வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை அவர்களும் கூட்டணியில் இல்லை. எனவே தங்களது ஜாதி வாக்குகளை நம்பி பாமக உள்ளது. மேலும், இந்த தேர்தலில் தங்களது அம்மாவிற்காக அன்புமணி ராமதாஸின் இரு பெண்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது. திமுகவை பொருத்தவரை பலமான கூட்டணி மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் போன்றவை சாதகமாக உள்ளது.
மேலும் படிக்க | அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ