தோனியின் நஷ்ட ஈடு வழக்கு: நிராகரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ALSO | IPL Auction 2022 ஏலத்தில் பண மழையால் மூழ்கவிருக்கும் இந்திய வீரர்கள்
ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் அண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தோனியின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, இந்த வழக்கில், தற்போது சாட்சி விசாரனை தொடங்கியுள்ள நிலையில் இந்த மனுவை ஏற்றுக் கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என கூறி சம்பத்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சாட்சி விசாரணை எதிர் கொள்ள வேண்டும் என சம்பத் குமாருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். சிஎஸ்கே அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2016 மற்றும் 2017ம் ஆண்டு தடை செய்யபட்டது. அந்த சமயத்தில் அதில் இருந்த வீரர்கள் வேறு அணிகளில் விளையாடினர். தோனி புனே அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO | டெஸ்ட்க்கு கோலி, ODIக்கு ரோஹித் - இந்திய அணி அறிவிப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR